(அப்ரா அன்ஸார்)

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமானது (CMEV), கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதன் காரணமாக, 2020 ஏப்ரல் மாதம் 25 ஆந் திகதியன்று நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலை பிற்போடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினை வலியுறுத்துகின்றது.
 
தேர்தலை நடத்துவற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பல செயற்பாடுகள் அதிகமானோரை ஒருவருக்கொருவர் நெருக்கமாக தொடர்புபடவைக்கக்கூடிய தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன என்பதுடன் அதனூடாக குறித்த வைரஸ் தொற்று பரவலடையக்கூடிய அபாயகரமான சூழல் ஏற்படக்கூடும். இது ஆயிரக் கணக்கான தேர்தல் அதிகாரிகள், கட்சி அலுவலர்கள், பொலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அவதானிப்பாளர்கள் நாடு முழுவதிலும் காணப்படுகின்ற ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கெணணும் நிலையஙக்ளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகச் சந்திக்கின்ற நிலைமையை ஏற்படுத்தும். அதாவது தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் கை நகத்தில் மை பூசுகின்றபோதும், வாக்குச் சீட்டினை வாக்காளர்களுக்கு வழங்கும்போதும் தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்காளர்களுக்குமிடையில் உடல் ரீதியான தொடுகைகள் ஏற்படுத்தப்படும்; அத்துடன் வாக்குகளை எண்ணும் நோக்கத்திற்காக பல்வேறு தேர்தல் அதிகாரிகள் அதே வாக்குச்சீட்டுக்களை கையாள வேணடிய நிலையும் ஏற்படும். தேர்தல் பேரணிகள், கூட்டங்கள் உள்ளடங்கலாக அனைத்துவிதமான தேர்தல் பிரச்சார செயற்பாடுகளும் பெருந்தொகையான மக்களை நெருக்கமாகத் தொடர்புறச் செய்வனவாகும்.

கொரோனா  வைரஸின் வேகமான பரவுகையும் அதனை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் (பாடசாலைகள் மற்றும் ஏனைய பொது இடங்களை மூடியுள்ளமை, பெரிய அளவிலான கூட்டங்கள், பிரயாணங்களுக்கு எதிரான மட்டுப்பாடுகள்) தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்களவான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனையும், வாக்குச்சாவடிகளில் ஏனைய வாக்காளர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கவேணடி;யேற்படும் என்ற அச்சத்தினால் வாக்காளர்கள் வாக்களிப்பிலிருந்து தம்மை தவிர்த்துக்கொள்ளலாம் என்பதனையும் (CMEV) குறிப்பிடுகின்றது. இது தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாகப் பிரயோகிப்பதற்கான வாக்காளர்களின் உரிமையிலும், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான இயலுமையிலும் பாரியத் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

மார்ச் முதல் மே வரையான காலப்பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஸ்பெயின் உள்ளடங்கலான பல நாடுகள் கொரோனா  வைரஸ் தொற்றின் பரவுகை காரணமாக குறிப்பிட்ட அத்தேர்தல்களை பிற்போடடு;ள்ளன என்பதனையும் (CMEV) சுட்டிக்காட்டுகின்றது.

பிற்போடுகை தொடர்பாக நோக்கும்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவானது அதிவிசேட வர்த்தமானி 2165/8 இனை மீளப்பெற்றுக்கொள்ளும்படி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வகோரிக்கையினை விடுக்கமுடியும். இம்மீளப்பெற்றுக்கொள்கையானது பாராளுமன்றக் கலைப்பினை இல்லாமலாக்கி பழைய நிலைக்கு கொண்டுவருவதுடன் தேர்தல்களையும் இடைநிறுத்தும். இல்லாவிடில், வேட்புமனு தாக்கல் செய்வது நிறைவு பெற்றதும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்கள் தொடர்பான அறிவித்தல்களை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற வர்த்தமானி அறிவித்தலின்கீழ் தேர்தல்களை ஒருதலைபட்சமாக பிற்போடலாம்.

இலங்கையர்கள் தம்முடைய வாக்குரிமையினை உண்மையில் சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் பிரயோகிக்க இயலுமானதொரு நிலையில் 2020 பொதுத் தேர்தல் நடைபெற்றது என்பதனை உறுதிப்படுத்துக் கொள்வதற்கு அவசியமான தம்மாலியன்ற உதவிகளை செய்வதற்கும், அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் (CMEV) தயாராக உள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.