(சபீர் காமில்)

நாப்பாவளை கிராமத்தில் நேற்றைய தினம் (23) இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் முன்னுதாரணம் மிக்க ஒரு சமூகப்பணி மேற்கொள்ளப்பட்டது.

 அதாவது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாப்பாவளை கிராமத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என அனைத்து குடும்பங்களுக்கும் தலா 800 ரூபாய் பெருமதியான கிட்டத்தட்ட 550 மரக்கறி பொதிகள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.

Direct Link சுற்றுலா முகவர் நிலையமும், ஊர் இளைஞர்கள் இருவரும் இந்த சமூகப் பணிக்காக நிதியுதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊர் இளைஞர்களின் ஒத்துழைப்பால், நேற்றைய தினம் (23) அதாவது திங்கட்கிழமை மாலை நேரம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்று கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் பொதிகளில் இடப்பட்டு இரவோடிரவாக ஊர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் இன, மத பேதமின்றி இதுபோன்ற சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணம் ஒன்றை உருவாக்குவதற்கு நாப்பாவளை இளைஞர்கள் மேற்கொண்ட இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.