1000 Body Bags விவகாரம் மீடியாக்களுக்கு எவ்வாறு கசிந்தது ; குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

Rihmy Hakeem
By -
0

சுகாதார அமைச்சினால் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட, கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை பொதியிடும் 1000 உறைகளுக்கு கோரிக்கை விடுக்கும் கடிதம் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

2020 ஏப்ரல் 24ம் திகதி அனுப்பப்பட்ட இந்த கடிதம் இரகசியத்தன்மை பேணப்பட்டு அனுப்பப்பட்டபோதும் ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசியம் பேண் கடிதத்தை சில தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களே பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர் என்ற வகையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

(அஜித்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)