பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களில் தங்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நேற்றைய தினம் (21) விசேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
தம்முடைய கல்வி நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் சென்ற இவர்கள், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக