காலி- கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை 1,291 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுள் 20 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நாளொன்றுக்கு 150 தொடக்கம் 200 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Tamil Mirror)
கருத்துகள்
கருத்துரையிடுக