அறிவழகன் மற்றும் அவரது மனைவி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக 130கிமீ மீட்டர் தூரம் சைக்களில் பயணம் செய்துள்ளார் 63 வயது அறிவழகன்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இருக்கும் மணல்மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். கட்டட தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் 49 வயது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைக்காக புதுச்சேரி வந்த பிறகு, தனது மனைவிக்கு சிகிச்சை முழுமை பெற சில மாதங்கள் ஆகும் என்பதாலும், சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்வதற்கு வாரந்தோறும், கும்பகோணத்திற்குத் தொடர்ச்சியாக சென்றுவர நேரிடும் என்பதாலும், சிகிச்சை முடியும் வரை புதுச்சேரியில் தங்கியிருந்துள்ளார் அறிவழகன்.

அறிவழகனின் கையில் பணம் இல்லாததால், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்கு தினசரி 10 ரூபாய் கட்டண செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில், தனது மனைவியை மட்டும் தங்க வைத்துவிட்டு, அறிவழகனும் அவரது மகனும் மருத்துவமனை வளாகத்தில் படுத்துக்கொண்டனர்.

அறிவழகன் மற்றும் அவரது மனைவி
குறிப்பிட்ட சில மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் மருத்துவமனையில் இல்லாத சூழலில், அதனை வெளியே வாங்குவதற்கும், தினசரி உணவிற்கும், பணம் தேவைப்படும் என்பதால், அவருக்குப் பரிட்சையம் இல்லாத புதுச்சேரி நகரப் பகுதியில் வேலைத் தேடி அலைந்த அறிவழகனுக்கு கட்டட வேலை ஒன்று கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் தனது மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும், எஞ்சிய நாட்களில் கட்டடத் தொழிலுக்கும் சென்றபடி இருந்தார். இப்படியே மூன்று மாதங்கள் கடந்த நிலையில், தனது மனைவியின் முதல் கட்ட சிகிச்சை முடிந்து. பின்னர், அவரை 3 வாரத்திற்குப் பிறகு பரிசோதனைக்காக அழைத்து வர மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தனது மனைவி மற்றும் மகனுடன் கும்பகோணம் திரும்பினார்.

மருத்துவர்கள் கொடுத்த 3 வாரம் முடிவடையும் நேரத்தில், அவரது மனைவிக்குச் சிகிச்சை செய்த இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பேருந்து சேவைகள் இல்லாத சூழலில், தனது மனைவியைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எப்படி அழைத்து செல்வதென்று தெரியாமல் இருந்தார்.

(பிபிசி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.