கடந்த 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி பெலிகல மற்றும் கட்டுகஸ்தோட்டை போன்ற பகுதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த 11 ஆம் திகதி வெலிமடை, கடவத்தை மற்றும் ராகம பிரதேசங்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதி நொச்சியாகம பகுதியில் வைத்து மேலும் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் இதுவரை சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்பிய 16 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.