இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 6 பேர் ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்திலிருந்து ஒலுவில் கொரோனா தடுப்பு முகாமிற்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மற்றுமொருவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54 பேர் பூரண சுகம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக