(அஷ்ரப் ஏ சமத்)

மாளிகாவத்தைப் பகுதியால் இன்று 21.04.2020 காலை நான் சென்றிருந்த போது மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போரா சமூகத்தை உள்ள சிலா் தம்மால் முடிந்தளவு 250 உலர் உணா்வு பாா்சல்களை பகிா்ந்தளிக்கின்றாா்.

 ஆனால் அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அவ்விடத்தில் வந்து பாா்சல் கேட்டு சண்டை பிடிக்கின்றாா்கள். அங்கு வந்திருந்த பெண்கள் அழுது புலம்புவதினை என் காதில் கேட்ட வாா்த்தைகள் - ஒழுங்காக சாப்பாடு சமைக்கிரத்துக்கு வீட்டுக்குள்ள ஒரு மணி  அரிசி கூட இல்லை. இவ்வளவு நாளும் பான் பருப்பும் தான் சாப்பிட்டோம்.  கையில் காசியும் இல்லை.

நானும் கிளினீங் தொழில் செய்தன் தெரிஞ்ச ஒரு நிறுவனத்தில் அங்கு போனத்தான் 840 ருபா ஒரு நாளைக்கு சம்பளம் தந்தாங்க அதைக் கொண்டு வந்து 3 பிள்ளைகளை காத்து வந்தன், எனக்கு கணவா் இல்லை அவா் வேறு திருமணம் முடித்து சென்று விட்டாா்.  இன்னும் ஒரு தாய், பிள்ளைகளுக்கு பால்மா போட்டு டீ ,  கொடுத்து 1 மாதம் ஆகிவிட்டது. சமுர்த்தியும் எங்களுக்கு  இல்லை.  ஏன் ? நான் 10 வருடத்திற்கு முன் வீட்டுப் பணிப்பெண்னாக  சவுதி சென்றதால்  எங்களுக்கு சமுா்த்தி வெட்டிவிட்டாா்கள். இன்னொரு தாய் இரண்டு பொடியன்கள் உள்ளனா் புறக்கோட்டைக்குப் போன ஆயிரம் இரண்டாயிரம் உழைத்து தருவாா்கள் ஆனால் புறக்கோட்டை சந்தையெல்லாம ஒரு  மாதம் மூடிக்கிடக்கிறது. பிள்ளைகளுக்கு தொழில் இல்லை. . மாளிகாவத்தையில் வாழு்ம் 15ஆயிரம் குடும்பங்கள் இருக்கும் அதில் 10 வீதமும் சமுா்த்தி பெறுவோா் இல்லை.

எங்களது கணவா் நாளாந்தம் கூலித் தொலில் செய்து ஆயிரம் , இரண்டாயிரம் உழைத்து வருவாா் இப்ப ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயே படுக்கின்றாா். நான் என்ன செய்வது ? உலா் உணவு கொடுக்கிறாா்கள் 5ஆயிரம் கொடுக்கிறாா்கள் எங்களுக்கு யாருக்குமே அது கிடைப்பதில்லை. என அழுது புலம்புகின்றதைக் என் காதுகளினால் கேட்கக் கூடியதாக இருந்தது. 

என்ன செய்யலாம் கொழும்பில் வாழும் பெரும்பாலான மக்கள் ஏழைகள் அண்டைக்கு அன்று உழைத்து உண்பவா்கள். அடுத்த நாளைக்கே வேண்டும் என சேமித்து வைப்பவா்கள் அல்ல. நெருக்கடியானதும் வாழ்வதற்கு கூட வசதிகள் அற்ற  முடுக்கு வீடுகளில் இந்த மக்கள்  வாழ்ந்து வருபவா்கள். அரச உத்தியோகத்தா்களுக்கு மாதாம் அரசு வங்கியில் சம்பளம் வைப்பிலிடுகின்றாா்கள்.

ஆனால் கொழும்பில் பிறந்து வாழ்பவா்கள் அரச உத்தியோகம்  5வீதத்திற்கு குறைவானவா்கள் தொழில் செய்கினற்னா். கொழும்பில் உள்ள அரச நிறுவனங்களில் தொழில் செய்வதெல்லாம் வேறு மாவட்டத்தினா் அதில் தமிழ் பேசுவோா் 10 வீதமே என புலம்பினாா்கள்.

 உண்மைதான்  இந்த கோரோனோ லொக் டவுனால்   தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றாா்கள். இவா்களுக்கு உதவுவது யாா் ? இம் மக்களது பசி தீா்ப்பது யாா் ? உதவுவதனாலும் பல இன்னல்கள் பல அனுமதிகள் எடுக்க வேண்டும்?






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.