கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இம்மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு வருடம் நிறைவடைகிறது.
இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அன்றைய தினம் காலை 8.45க்கு வீடுகளில் இருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு என கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
இதேவேளை இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
கொழும்பு போராயர் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்..
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம், வைத்தியர்கள், தாதியர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் என பலத்தரப்பினரும் தன்னலம் பாராது சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் திருப்பலிகள் உள்ளிட்ட எமது வேலைத்திட்டங்களை நடத்தாமலிருக்க தீர்மானித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துகள்
கருத்துரையிடுக