கொவிட்-19 தொற்றுநோய் சந்தேகம் உள்ள நபர்கள் 20 பேர் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனரென, களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்  உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
  அட்டுளுகம - பண்டாரகமயைச்சேர்ந்த இவர்கள் பிலியந்தலை  சர்வோதய மத்திய நிலைய கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அட்டுளுகம- மாராவ பிரதேசத்தில் மார்ச் மாதம் 26ஆம் திகதி கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, குறித்த 20 பேரும் 28ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், 16 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இவர்கள், இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், ஏற்கெனவே தொற்றுக் குள்ளானவர்கள் முறையாகக் கவனிக்கப் பட்டுவருவதாகவும் சுகமடைந்து வீடு திரும்பிய
மொஹம்மத் முனீர்  கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கம் தங்களை சிறப்பாகக் கவனித்தாகவும் தங்களுக்கு மிகவும் ஆதரவு காட்டியதாகவும் தெரிவித்தார்.
(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.