217 தொழிற்சாலைகளில் பணிகள் மீண்டும் ஆரம்பம் - பிரசன்ன

Rihmy Hakeem
By -
0
நாடு முழுவதுமுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் 217 தொழிற்சாலைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சாலை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமையவும் இவர்கள் செயற்பட வேண்டியது அவசியம் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 48 தொழிற் சாலைகளிலும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் 35 தொழிற்சாலைகளிலும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 30,269 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)