இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளாகி உறுதி செய்யப்பட்ட பதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும்.
இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் மத்தியில் இருந்து அடையாளங்காணப்பட்டவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துகள்
கருத்துரையிடுக