Update :

மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 242 ஆக உயர்வடைந்துள்ளது.

முன்னைய செய்தி

இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (17) மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பேருக்கு இவ்வாறு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் இந்த எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 77 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது 164 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 200 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.