5,000 ரூபாய் கொடுப்பனவை பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, பிங்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை பிரதேச சபையின் உறுப்பினரான சுஜித் பிரியந்த என்பவரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகச் சென்றபோது, பிரதேசத்திலிருந்த ஒருவர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
தாக்குதலுடன் தொடர்புடையவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்றும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.