இன்றைய தினமும் (24) வெலிசரை கடற்படை முகாமை சேர்ந்த 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஏற்கனவே 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருந்த நிலையில், மொத்தமாக 60 கடற்படை வீரர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 414 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை இன்றைய தினம் 46 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.