புத்தளம் மாவட்டத்தில் நேற்றைய தினம் (2020.04.15) மாலை வீசிய கடும்காற்றின் காரணமாக கரவலகஸ்வேவ, நவகத்தேகம, புத்தளம், வனாத்துவில்லு மற்றும் மாக்கும்புக்கடவல ஆகிய ஐந்து (5) பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 635 வீடுகள் சேதமடைந்தள்ளன.
இதுதொடர்பாக புத்தளம் மாவட்ட செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ சந்ரசிறி பண்டார வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:
நேற்றைய தினம் (2020.04.15) மாலை வீசிய கடும்காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் கரவலகஸ்வேவ, நவகத்தேகம, புத்தளம், வனாத்துவில்லு மற்;றும் மாக்கும்புக்கடவல ஆகிய ஜந்து (5) பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 635 வீடுகள் சேதமடைந்தள்ளன. இவற்றில் சுமார் 37 வீடுகளின் கூரைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் இடம்பெயர்ந்தவர்கள் பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.
பிரதேச செயலாளர் அலுவலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை நெல்லும் மழையினால் நனைந்துள்ளது. இந்த களஞ்சியசாலைகளின் கூரைகள் கடும் காற்றினால் பாதிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும். இதற்கமைவாக நேற்று இரவு இந்த களஞ்சியசாலைக்கு இடப்பட்டிருந்த பாதுகாப்பு முத்திரை அகற்றப்பட்டு நனைந்த ஒரு தொகை நெல் ஒதுக்கப்பட்டதுடன் அந்த நெல் எவ்வளவு என்பது மதிப்பிடும் பணிகள் இன்ற காலை மேற்கொள்ளப்படவுள்ளது.
முழுமையாக வீட்டுக் கூரைகள் சேதமடைந்த வீடுகளுக்கு இன்று காலை 10 மணிக்கு முன்னர் தற்காலிக கூரைகளுக்கான தற்காலிக பாதுகாப்புக்கான (டாபோலின்) வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேறககொள்ளப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண பணிகள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களினாலும், இந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் திருத்தப்பணிகளும் அன்றைய தினம் மாலை ஆரம்பிக்கப்பட்டன.
மரங்கள் முறிந்து விழுந்ததினால் மின்சாரக்கட்டமைபபிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன் பிரதேசத்தில் பல பகுதிகளுக்கான மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் 7,000 வீடுகளுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதேச பொறியியலாளருடன் கலந்துரையாடி மின்சார கட்டமைப்பை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலையளவில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கும். மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததினால் வீதிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அத்தோடு ஆணமடுவ – நவகத்தேகம வீதி, வெலேவேவ பிரதேசத்திலும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.. இந்த பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த பகுதியில் நேற்று இரவு இந்த இடையூறுகள் அகற்றப்பட்டன.
இதே போன்று பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் எவ்வளவு என்பதை மதிப்பிடும் பணிகள் தற்பொழுது இடம்பெறுவதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கைகளை இன்றைய தினம் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.