கனகராசா சரவணன்
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு வானொன்றில் சட்டவிரோதமாக 65 போத்தல் மதுபானங்களை கடத்திச் சென்ற போக்குவரத்து பொலிஸ்  உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர், கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள வீதி சோதனை சாவடியில் வைத்து நேற்று (11) கைதுசெய்யப்பட்டள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வானை சோதனை செய்த போது, அதில் உரைப்பைகளில் மதுபான போத்தல்களை கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
இதனையடுத்து, குறித்த வானில் பொலிஸ் சீருடையில் இருந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் போக்குவரத்து பொலிஸ்  உத்தியோகத்தர், வான் சாரதி  ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், 65 போத்தல் மதுபானங்களையும் வானையும் கைப்பற்றியதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் கடையொன்றில் இருந்து குறித்த வானை, ஒருவர் மூலம் ஒருவராக கைது செய்யப்பட்ட 3ஆவது நபர், பொலிஸாருக்கு அரிசி ஏற்றி கொண்டு வருவதற்கு என வெள்ளிக்கிழமை இரவு 10  மணிக்கு வானை வடைகைக்கு எடுத்துச் சென்று, குறித்த போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து, இந்த சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.