இன்று இரவு 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது
ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அலவத்துகொடை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் இன்று இரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்படுகின்ற ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக