கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று ஸஹ்ரான் ஹாஷிமின் குழுவினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச முஸ்லிம் லீக் வழங்கிய 90 கோடி பணத்திற்கு என்ன நடந்தது என ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச முஸ்லிம் லீக்கின் செயலாளர் இலங்கை வந்த நேரத்தில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 90 கோடி ரூபாயை வழங்கியிருந்தார்.
அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், முன்னால் மேல் மாகாண ஆளுனர் முஸம்மிலும் பொறுப்புக் கூற வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக