அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் முயற்சியில் A/L மாணவர்களுக்கு யூடியூப் மூலம் கற்பித்தல் நடவடிக்கை



தற்போது உலகினை பாதித்து பல்வேறு துறைகளிலும் சரிவினை ஏற்படுத்திவரும் கொவிட்19 ஆனது கல்வித் துறையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்காலப்பகுதியில் மாணவர்களது கல்விச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தற்காலிக தடங்கலானது பெற்றோர், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அதே வேளை, மாற்று கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளை நாடுவதன் தேவையை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் அனைத்து பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர் ஒன்றியமானது  2020 ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை இலகுபடுத்தும் முகமாக கடந்த வருட வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்டு  e-study எனும் தொனிப்பொருளின் கீழ் ஒம்சாவின் தொண்டர் குழுவிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் உதவியோடு, 6 பாடத்துறைகளிலும் (பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பொறியியல் தொழில்நுட்பம், உயிர்முறை தொழில்நுட்பம், வணிகம், கலை) காணொளி மூலமான கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது.

 "Aumsa Media" எனும் எமது உத்தியோகபூர்வ யூடியூப் சென்னல் ஊடாக காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி காணொளிகளை உங்களது பிள்ளைகளுக்கும் பார்வையிட வழங்குவதன் மூலம்  வீட்டில் இருந்தவாறே அவர்களது கற்றல் செயன்முறைகளை இலகுபடுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Ahmath Sadique (Member of Sri Lanka youth parliament.
President of AUMSA.

கருத்துகள்