கொழும்பு நகரை மையப்படுத்தி இன்றிலிருந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் 16 இடங்களை உள்ளடக்கிய வகையில் விசேட வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். கொழும்புக்குள் அத்திவாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் சுகாதார ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதினால் இந்த பணிகளில் ஈடுபடும் சட்டத்தரணிகளுக்கு தமது வீடு மற்றும் நீதிமன்றங்களுக்கிடையிலான பகுதிக்கிடையில் ஊரடற்குச் சட்டம் அமுலில் இருந்த போதிலும் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணிகள் அவசியம் இதன் போது தமது கடமைக்கான சீருடையில் இருப்பது கட்டாயமாகும். அதே போன்று இவர்கள் அந்த சந்தர்பத்தில் கடமையிலிருக்கும் பாதுகாப்பு பிரிவினரிடம் தமது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
கொழும்பு நகரில் கொரோ தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.