எட்டாவது தொடர்..............


இஸ்ரேலின் ஒஸ்லோ உடன்படிக்கை மீறலும், யூத குடியேற்றமும், ஹமாஸ் இயக்கமும்


1967 இல் ஆறு நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் இஸ்ரேலினால் கைப்பெற்றப்பட்ட எகிப்தின் சினாய் பிரதேசம், சிரியாவின் கோலான் குன்று, காசா மற்றும் ஜெருசலம், மேற்குக்கரை, ரமல்லாஹ் ஆகிய நகரங்கள் தனக்கே சொந்தம் என்று இஸ்ரேல் பிரகடனப்படுத்தியது. 

பாலஸ்தீன மண்னில் யூதர்களுக்கு இடமில்லை என்ற கொள்கையிலிருந்து விலகி 1967 க்கு முன்புள்ள எல்லைக்கு இஸ்ரேல் செல்ல வேண்டும் என்ற விட்டுக்கொடுக்கும் நிலைப்பாட்டுக்கு வரவேண்டிய நிலை முஸ்லிம் தரப்புக்கு ஏற்பட்டது. 

இதற்கிடையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஜோர்டானிலும், லெபனானிலும் தளங்களை அமைத்துக்கொண்டு தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக போராடியது. இஸ்ரேலின் நிலைகள் மட்டுமல்லாது விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடாத்தியது.

இதனால் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேறிச் சென்றார்கள். தங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் யூதர்கள் பெரும்பான்மையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள்.

அத்துடன் 1967 யுத்தத்தில் கைப்பேற்றப்பட்ட முஸ்லிம்களின் நிலங்களில் திட்டமிட்ட யூத குடியேற்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெரூசலத்திலும் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட யூத குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.   

இந்தநிலையில் தொடர்ந்து அங்கு ஆயுத மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இஸ்ரேலிய படைகளை பாலஸ்தீன விடுதலை இயக்கம் தாக்குவதும் அதற்கு பதிலடியாக முஸ்லிம் அப்பாவி மக்களை கொத்துக்கொத்தாக யூத இராணுவம் கொலை செய்வதும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான கொலைகளுக்கு எங்கும் நீதி கிடைக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு விடயம் கொண்டுசெல்லப்பட்டாலும் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தின் மூலம் குற்றவாளியான இஸ்ரேல் அமெரிக்காவால் பாதுகாக்கப்பட்டது.

அவ்வாறு அமெரிக்கா தொடர்ந்து தன்னை பாதுகாத்து வருவதனால் எந்தவித தயக்கமுமின்றி பாலஸ்தீன முஸ்லிம்களை யூத இராணுவம் கொலை செய்தது.

உலகில் ஐம்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும், பாலஸ்தீன மக்கள் அநாதைகள் போன்றே காட்சியளித்தார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல நாடுகள் முயற்சி செய்தும், அனைத்தும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், 1993 இல் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அதில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் வன்முறைகளை கைவிடுவதுடன் இஸ்ரேலை அங்கீகரிப்பதென்ரும், மேற்குக்கரை, காசா போன்ற இடங்களில் நிறுவப்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்களை விலக்கிக்கொள்ள வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் கூறுகின்றது.

ஆனால் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்று வரைக்கும் எந்தவொரு யூத குடியிருப்புக்களையும் இதுவரையில் இஸ்ரேல் விலக்கிக்கொள்ளவில்லை. அதாவது ஒஸ்லோ உடன்படிக்கையை பாலஸ்தீனர்கள் அமுல்படுத்தியது போன்று இஸ்ரேல் அமுல்படுத்தவில்லை.

அத்துடன் யுத்தத்தினால் வெளியேறிய மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் மறுத்து வருகின்றது.

அவ்வாறு முஸ்லிம்களை மீள்குடியேற அனுமதித்தால், அது யூதர்களின் விகிதாசாரத்தை பாதிக்கும் என்பது இஸ்ரேலின் நிலைப்பாடாகும்.

இதற்கிடையில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையை ஹமாஸ் இயக்கம் முழுமையாக நிராகரித்தது.

யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததனால் 1987 இல் சேக் அஹமத் யாசீன் தலைமையில் ஹமாஸ் இயக்கம் உருவாக்கப்பட்டது.

ஹமாஸ் இயக்கம் உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் தொடர்ந்து வியப்பூட்டும் ஏராளமான தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடாத்தியுள்ளது.

உலகத்தில் முதன் முறையாக தற்கொலை தாக்குதலை அறிமுகம் செய்ததுடன், இஸ்ரேலுக்கு பலத்த சவாலாக இருந்து வருவது ஹமாஸ் இயக்கமாகும். 

குறுகிய காலத்துக்குள் மக்களின் மணங்களை வென்றுள்ள ஹமாஸ் இயக்கமானது, மக்களின் ஆணையுடன் காசா பகுதியை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருகின்றது. ஆனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஹமாஸ் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று கூறிவருகின்றது.

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

தொடரும்.....................................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.