(நா.தனுஜா)

பசில் ராஜபக்ஷ தலைமையிலான விசேட ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையின உறுப்பினர்கள் இடம்பெறாமை பெரும்பான்மையின இனவாதத்தையே காண்பிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.


கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டிலை மேற்கோள்காட்டி தனது டுவிட்டரில் பதிவொன்றைச் செய்திருக்கும் மங்கள சமரவீர மேலும் கூறியிருப்பதாவது:
"பசில் ராஜபக்ஷ அவர்களே, இது வெட்கத்திற்குரியதாகும். உங்களால் தலைமை தாங்கப்படும் 30 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணி நாட்டின் பல்வகைமைத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இல்லை.

 அதில் ஒரு தமிழர் மாத்திரமே அங்கம் வகிக்கிறார். முஸ்லிம்கள் எவருமில்லை.
தேசிய ரீதியிலான ஒரு நெருக்கடி நிலையிலும் கூட, பெரும்பான்மை இனவாதமே உத்தியோகபூர்வக் கொள்கையாக இருக்கிறது."

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.