தென்னாபிரிக்கக் கண்டத்திலே Zulu மொழியறியாதோர் மிகச் சொற்பம். தென்னாபிரிக்கா, Eswatini, நமீபியா, மாலாவி மற்றும் லெசோத்தோ நாட்டில் அம்மொழியைப் பேசுவோர் செறிந்திருக்கன்றனர். உயிரெழுத்தையும் மெய் எழுத்தையும் மாத்திரம் கொண்ட மொழி.

சுமார் 6800 மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் 2000 மொழிகளே பேச்சு,எழுத்து வழக்குகளைக் கொண்ட திருந்திய வடிவமாகக் காணப்படுகின்றன. இவ்வெல்லா மொழிகளையும் 20 மொழிக்குடும்பத்தில் அடக்கி விடலாம்.

திராவிட மொழிக்குடும்பத்தில் வரும் மொழிகள் உயிர்மெய்யெழுக்களைக் கொண்டிருக்கும் எனினும் Bantu மொழிக்குடும்ப மொழிகள் உயிர்மெய் கொண்டிறாது அமையும். தமிழில் ஆடொலி வருடொலி என மொழிப்பிறப்புச்சரிப்பை வகுப்பது போல Zuluவில் வகுத்ததில்லை. ("Tloho"-வாருங்கள்) இதனை எவ்வாறு உச்சரிப்பீரோ அஃதே மொழி முழுதுமான உச்சரிப்பின் “பதம்”.

திருக்குறளைப் பண்போடு காத்து வருவதுபோல் Zulu மக்கள் “வெண்புறா பறக்கட்டும்” நூலைக் காத்து வருகின்றனர். எழுதியவர் ஐரோப்பிய யூதர்.
புத்தகத்தைப் போலே புத்தகம் எழுந்தபிண்ணனியை அறிவதும் சுவை.உற்ற துயரம் கற்ற அறிவு பட்ட சவால்கள் என இன்னும் ஆயிரமாயிரம்.

புத்தகம் எழுந்த பிண்ணனின் களம் உலகப்போர் மூண்ட காலம். ஹிட்லர், நாஜிப் படைகளை கட்டவிழ்து யூதர்களைக் கொன்றவரிக்குமாறு கட்டளை பிறப்பிக்கிறார். தன்மகனோடு தப்பித்து எகிப்து வந்து எகிப்தியர் உதவியோடு தென்னாபிரிக்கா Kwa-zuluவில் கிராமமொன்றில்  வந்து சேர்கிறார். தந்தை தோய்வாய்ப்பட்டு சிறிதுகாலத்தில் இறக்க விரக்தியுற்று கால்வந்தபோக்கல் நடந்து செல்ல பாட்டியொருவர் தத்தெடுக்கிறார். அங்கே கற்று   “வெண்புறா பறக்கட்டும்” நூலை எழுதுகிறார்.
 
திருக்குறள் போன்ற நூல் என்றேனல்லவா... நூல் முழுதும் சமாதானத்தை வலியுறுத்தும் அறக்கருத்துக்கள். போரை முற்றும் வெறுத்திருக்கிறார். மனிதன் மீது மனிதன் தொடுக்கும் போர் இதுவே கடைசியாகவிருக்கட்டுமென கண்ணீரில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். போரின் ரணம் அனுபவித்தவனுக்குத்தானே தெரியும். Unorthodox தொடரில் வருவது போன்று கறுப்பின யூதர்களும் அவர்களின் மதத்தை தீவிரமாகப் பின்பற்றுகின்றனர். எல்லாவற்றையும் விட முஸ்லிம்களொடு தெருங்கிப் பழகுகின்றனர். “ஹஸடி”Ha-stadi நகரில் ஸாவயா/ ஸாவியா கட்டுவதற்கு நலத்தை மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள் யூதர்கள். ஐரோப்பாவிலிருந்து தப்பி ஆபிரிக்க செல்ல உதவிய முஸ்லிம்களை என்றும் நன்றியுணர்வொடு நடத்த வேண்டுமென மனதில் ஆணியடித்து வைத்திலுக்கின்றனர்.

பேசும்போது, எதையாவது கற்றுக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவை பெருக்குவதில் மரணம்வரை முனைப்பொடு செயற்பட வேண்டுமென அதிகம் சொல்லுவர். அமெரிக்காவில் பூகம்பத்தின்போதும் இஸ்ரேலில் காட்டுத்தீயின் போதும் முகநூலில் “மாஷா அல்லாஹ்” “கொமண்ட்” இடும் மூளைகழன்றவர்களைப் போலத்தான் , போர்புரிபவர்களும்எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பேராசிரியர் Thabo Rethabile குறிப்பிடும் போது போரை விரும்புபவர்கள் மனிதப் பெயரிலிருக்கும் ரத்தக் காட்டேரிகள் என்றார். மரணத்தின் வடு இன்னும் மனதில் ஊன்றிப் பதிந்திருக்கிறது போலும் .ஆபிரிக்க,மொழியியல் மற்றும் இலக்கியப் பேராசிரியர் Thabo அவர்களுடன் நேற்றைய பின்னிரவில் கதைக்கையில்  “நாங்கள் ஆபிரிக்க யூதர்கள் சமாதானத்தை தாய்நாட்டைப் போல் விரும்புகிறோம்.எனினும் சுய லாபத்துக்காக முஸ்லிம்களில் சில அமைப்புக்களும் ஜேர்மன் நாஜி அமைப்புக்களும் தம்மை கொலைகாரக்கும்பல் போல் சித்தரிப்பது மனவேதனையளிக்கிறது”என்றார். மெய்-வெய்யோன் போன்றது.என்றேன். விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்.

கஹட்டோவிட்ட சிபான்
2020-04-25

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.