கொழும்பு த சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த கர்ப்பிணித் தாய்க்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருதானை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். இதனால் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக