சமூர்த்தி பயனாளிகளுக்கு அநீதியும் இடம்பெறாதவகையில் பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு தற்போது வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அனைத்து சமூர்த்தி பயனாளிகளுக்கும் நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனது முப்பதுவருட அரசியலில் இவவாறான் கொடுப்பனவு முறைiயை நான் ஒருபேதும் கண்டதில்லை நூற்றுக்கு 80 வீதம் கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் சமூர்த்தி நிவாரணங்களை வழங்கிய போது அதனைப் பெற்றுக்கொண்ட யாருக்கும் 80 வீத கட்டாய சேமிப்பு காணப்படவில்லை. தற்போது அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. 80 வீத கட்டாய சேமிப்பு உள்ளவர்களுக்கு மாத்திரம் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற முறையை தற்போதும் நடைமுறையில் இருந்திருந்தால் கடந்த அரசாங்கத்தில் நிவாரணம் பெற்ற எவருக்கும் தற்போது இந்த கொடுப்பனவு கிடைக்காது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான பாகுபாடான நடவடிக்கைகளை முன்னெடுக்காது எவ்வித பேதமும் இன்றி இம்முறை எமது அரசாங்கத்தால் சமூர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த தீர்மானம் சமூகமயப்படுத்தப்படவில்லை. அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பரவலடைந்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
கருத்துகள்
கருத்துரையிடுக