உதவ முடிந்தவர்கள் யடியாந்தோட்டை - களனி தோட்ட மக்களுக்கு உதவுங்கள்




கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்ட பிரதேச செயலகத்திற்குற்பட்டதே களணித் தோட்டம் எனும் அறியப்படாத பிரதேசமாகும்.

இங்கு சுமார் 27 முஸ்லிம், 53 தமிழ் குடும்பங்கள் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

COVID 19 வைரஸ் பரவல் காரணமாக தொடர்சசியாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழலினால் களணி தோட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

தமிழ் - முஸ்லிம் என்ற பிரிவினைகளின்றி இணைந்து வாழும் நூற்றுக்குக் குறைவாக வாழும் குடும்பங்களுள் விதவைகளும் அடங்குகின்றனர்.

அன்றாட கூலி வருமானத்தைக் கொண்டு வாழ்கையை ஓட்டிச் செல்லும் மக்கள் தவிர செல்வந்தர்கள் எவரும் இங்கில்லை.

இங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களுக்கு சில உதவிகள் கிடைக்கப் பெற்ற போதிலும் அவை அனைவருக்கும் போதுமானதாகவில்லை.

இங்குள்ள பள்ளிவாசலில் கடமைபுரியும் கதீப் அவர்களுக்கு மாதச்சம்பளம் வசூலிப்பதற்கும் வழியின்றி கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகமானது இன, மத பேதங்களைக் கடந்து பல உதவிகளை பரிந்து வருகின்றது.

அந்த வகையில் களணித்தோட்டத்தில் வாழும் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைப் புரிய முன்வருவோம்.

உதவி செய்ய விரும்புவோர் 
#Masjithul_Rahmath
#Kalani_Eatate
#ACNo_047200140023127
#People_Bank,
#Yattiyanthotta. 

அல்லது
முஜீப் மௌலவி (0718137450) ஊடாக அங்குள்ள மக்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது அல்லாஹ்விக்காக செய்யும் உதவி

மேலதிக விபரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ள முடியும்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
0777578526

கருத்துகள்