பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சூழல் சரியானதா? இல்லையா? ; நாளை தீர்மானம் - மஹிந்த தேஷப்பிரிய



பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சூழல் சரியானதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கவும் இலங்கையில் கொரோனா வைரஸின் நிலை தொடர்பான முழுமையானத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் நாளை (20), சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அது தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தீர்மானம் எடுக்கும்வரையில், பொதுத் தேர்தல் குறித்து தன்னால் எந்தவொரு கருத்தையும் கூறமுடியாது என்ற அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தைக் மீண்டும் கூட்டுதல் உள்ளிட்ட பிற விடயங்கள், தேர்தல் ஆணைக்குழுவின், தேர்தல் செயலகத்தின் கீழ் தீர்மானம் எடுக்கப்படுவதில்லை என்றும் எனினும், ஜனாதிபதி விரும்பினால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.
(தமிழ் மிரர்)

கருத்துகள்