‘சட்ட ரீதியாக ஊரடங்கை அமுல் செய்ய சட்டத்தில் போதுமான வழிமுறைகள் இருந்தும் அவ்வாறு எந்த ஊரடங்கும் இங்கு இல்லை. சட்ட ரீதியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்யாது ஊடகங்கள் வாயிலாக அவ்வறான நிலைமையைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை சட்ட விரோதமானதாகும்.

அப்படியானால் சட்ட ரீதியாக இங்கு ஊரடங்கு இல்லை. இல்லாத ஊரடங்கிற்கு எதற்காக அனுமதிப்பத்திரம் பெற வேண்டும்.

அவ்வாறில்லாத ஊரடங்கு சட்டத்தை மீற ஒருவருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக எனது சேவை பெறுநர் மீது எப்படிக் குற்றம் சுமத்த முடியும்? என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று (20) நுகேகொட நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த சட்ட ரீதியிலான தர்க்கத்தையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.

பிணை கிடைத்த பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியில் M A சுமந்திரன் அவர்கள் பேசும்போது,  நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டே நாம் அரசாங்கம் சொல்வதை கேட்கின்றோம். அது தவிர சட்ட ரீதியான ஊரடங்குச் சட்டம் இல்லை.

இங்கு பொலிஸார் சட்ட விரோதமான செயலை செய்து விட்டு, அதில் ஏற்படும் பிரச்சினைகளின் போது பிறரைக் கைது செய்ய முடியாது. ஊரடங்குச் சட்ட ரீதியாக இல்லை. எனினும் நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.