கொரோனா வைரஸ் தொற்று, எதிர்வரும் நாட்களில் இலங்கையில் அபாயமாக இருக்கும் என சுகாதார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் சில மாவட்டங்களில் கண்டு பிடிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் குறித்து கவனம் செலுத்தும் போது இந்த அபாய நிலைமை உருவாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் சுவாசப்பை தொடர்பிலான ஏதேனும் உபாதைகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டுமென டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.