வீட்டுத்தோட்டமும் மனநலமும் - பகுதி 4

பொருளாதார அபிவிருத்திற்கு கைகொடுப்போம் 
இப்போதெல்லாம் நம்மில் பலர் தமக்கிருக்கும் இடத்தை பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் அமைக்க மிகவும் ஆசையுடன் செயற்பட்டு வருவதை காணமுடிகிறது. விதைகள்இ கன்றுகள் வாங்குவதை பரிமாறிக்கொள்வதை பார்க்கும் போதும் கேட்கும் போதும் தனது பயன்பாட்டிற்கும் உள்நாட்டு பொருளாதார அபிவிருத்திற்கும் ஒவ்வொரு தனிமனிதனும் தன் மனதிற்குள் ஒரு விதையை விதைத்துவிட்டான் என்பது வெளிப்படையாக விளங்குகிறது. உள்நாட்டு அபிவிருத்தியில் மனிதக்கரங்களின் உற்பத்தி முக்கிய காரணமாக அமையப்போகிறது.

நீங்கள் இன்று நடுவதற்கு ஆரம்பித்துவிட்டீர்கள். மண்ணோடு உறவு கொள்ள உங்கள் இதயத்தை திறந்துவிட்டீர்கள். இதனால் உங்களால் நாட்டிற்கு கிடைக்கப்போகும் நன்மைகள் பல. இன்னும் சில வாரங்களில்...

உங்களுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கும் 
நீங்களே அறுவடை செய்வீர்கள் 
ஆசையுடன் உண்பீர்கள்
உடல் ஆரோக்கியம் கூடும் 
கடையில் வாங்கும் அளவு குறையும் 
தேவைக்கு அதிகமானவற்றை விற்றால் பணம் கிடைக்கும்
அயலவர்ளுக்கிடையில் பரிமாற்றம் அதிகரிக்கும்
சுற்றுச்சூழல் அழகடையும் 
குடும்ப உறவு பலமடையும்
பொருளாதாரம் வளமடையும்
நாட்டில் இறக்குமதி செய்யும் அளவு குறையும் 
மனம் அமைதியும் மகிழ்ச்சியும் அடையும் 
அரசின் மருத்துவ செலவுகள் குறையும் 

இப்படி பல வடிவங்களில் உங்கள் பணி நன்மைகளை கொண்டுவரப் போகிறது.

நீங்கள் செய்வது சாதாரண வேலையள்ள. அது ஒரு மகத்தான பணி. நாட்டுக்குச் செய்கின்ற உயர்வான சேவை. மண்ணுக்குச் செய்கின்ற மறியாதையும் கூட.
பயிர்நட்டு  பொருளாதாரத்தை வளப்படுத்த நாட்டுக்கு முடிந்த அளவு பணிசெய்யக் கிடைத்ததையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

இப்போது வாகனங்களில் வீட்டுக்கே காய்கறிகள் வரலாம். அதை பார்த்துவிட்டு ஏன் தோட்டத்தில் நடவேண்டும்!  என்று எண்ண வேண்டாம்.
வீட்டோடு இருந்த காலம் முடிந்துவருகிறதுது. வழக்கம்போல் கடையில் மறக்கறிகளை வாங்கலாம். எதற்கு நட்டி நேரத்தை செலவிடுவது...? என்று எண்ணவும் மனதிற்கு இடம் கொடுக்க வேண்டாம்.

கொரோனா எங்களைவிட்டு விலகிப்போகின்றதே என்று நாம்  சந்தோசப்படலாம். ஆனால் அது ஒரு பெரிய பொருளாதாரப் பாதிப்பை அல்லது உணவுப் பற்றாக்குறையை உருவாக்கிவிட்டுப் போகலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதை நாம் மறக்கலாகாது. வரும் காலத்தில் நாம் முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் நிறைய இருக்கலாம். எம் சிந்தனைக்கு வராத சிக்கல்கள் பின்னே வரலாம். நாம் இப்போது எடுத்திருக்கின்ற இந்த முயற்சியை விட்டுவிடாமல் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவோம்.

நடுவோம்! நடுவோம்! பயிர் நடுவோம்!
------------------------------
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.