ஏழாவது தொடர்.............
அரபு நாடுகள் ஏன் தோல்வியடைந்தன? இஸ்ரேலிய உளவாளி யார்?
சிறிய எண்ணிக்கையிலானோர் பெரும் எண்ணிக்கையான படையினர்களுடன் போர்புரிந்து வெற்றிகொண்ட வரலாற்றை ரசூல்லுல்லாஹ் அவர்கள் பத்ர் போர் மூலம் காண்பித்தார்கள்.
அதேபோல் 1967 இல் இஸ்ரேல் அரபு நாடுகளுக்கிடையில் ஆறு நாட்கள் மட்டும் நடைபெற்ற யுத்தத்தில் இஸ்ரேல் நடாத்திய அதிர்ச்சியூட்டும் தாக்குதலானது உலக நாடுகளை வியப்பூட்டியதுடன் அது ஹீரோ என்ற அந்தஸ்தை இஸ்ரேலுக்கு வழங்கியது.
உலகில் உள்ள யூதர்கள் மத்தியில் இஸ்ரேலின் எதிர்காலம் குறித்த அச்சநிலையை போக்கி அதன் இஸ்திரத்தன்மைக்கு வலுச்சேர்க்கும் விதமாக இந்த வெற்றி அமைந்தது.
சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலை முற்றாக அழிப்பதற்கு அரபு நாடுகள் திட்டமிட்டன. அதில் இஸ்ரேலை சுற்றிவர முற்றுகையிட்டு ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தி அழிப்பதுதான் அந்த திட்டமாகும்.
இதற்காக 950 யுத்த விமானங்கள் உற்பட ஆயிரக்கணக்கான கனரக யுத்த தளபாடங்களும், இலட்சக்கணக்கான படைவீரர்களும் தயார்படுத்தப்பட்டனர்.
திட்டமிட்டதன்படி இந்த தாக்குதல் நடைபெற்றிருந்தால், இஸ்ரேல் என்னும் நாடு ஒரு சதுரமீட்டர் பரப்பளவிலும் இருந்திருக்காது. அது சல்லடை போடப்பட்டு யூதர்களின் இஸ்ரேல் என்ற கனவு அன்றோடு முற்றுப் பெற்றிருக்கும்.
அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்படியொரு தாக்குதலை தன்மீது நடத்தப்போகின்றது என்ற தகவலை தனது உளவாளி மூலமாக இஸ்ரேல் அறிந்துகொண்டது.
இந்த பெறுமதியான தகவலை இஸ்ரேலுக்கு வழங்கிய உளவாளி யார் ?
இந்த தாக்குதலை திட்டமிட்ட அன்றைய எகிப்து ஜனாதிபதியான கமால் அப்துல் நாசரின் மருமகனான அஸ்ரப் மறுவான் என்பவர்தான் இந்த தகவலை இஸ்ரேலுக்கு வழங்கியிருந்தார்.
எதிரியின் உளவாளி தனது வீட்டுக்குள் இருக்கின்றார் என்பதனை யுத்தத்தை திட்டமிட்டு வழிநடாத்திய எகிப்திய ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை.
இப்படியொரு பாரிய படையெடுப்பின் மூலம் தன்னை அரபுநாடுகள் ஒன்றுசேர்ந்து அழிக்கப்போகின்றது என்பதனை அறிந்த இஸ்ரேலுக்கு அது வாழ்வா சாவா என்ற நிலையில், எதிரி தன்மீது தாக்குதல் நடாத்தும் வரைக்கும் காத்துக்கொண்டிராமல், எதிரியை அவர்களது இடத்துக்கு தேடிச்சென்று அழிக்கவேண்டுமென்று இஸ்ரேல் எண்ணியது.
சற்றும் எதிர்பாராத நிலையில் வலிந்துசென்று இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. அதில் அரபு நாடுகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த யுத்த விமானங்களை பறக்க விடாமல் தடுப்பதுடன், அதனை முற்றாக அழிப்பது அவர்களது முதலாவது திட்டமாகும்.
அதற்காக எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குள் ஒரே நேரத்தில் திடீரென புகுந்த இஸ்ரேலிய விமானங்கள் அங்கு தயார்நிலையில் இருந்த சோவியத் ரஷ்ய தயாரிப்பான சுப்பர் சொனிக் விமானங்களையும், அது நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடுபாதைகளையும் குண்டு மழை பொலிந்து அழித்தனர்.
அத்துடன் மற்றைய இஸ்ரேல் விமானப்படை அணியினர் யுத்த டாங்கிகள், கவச வாகங்கள், பீரங்கிகளை குறிவைத்து தாக்குதல் நடாத்தி அழித்தனர். இதில் பின்வாங்கி சென்ற இராணுவத்தினரையும் இஸ்ரேலிய விமானங்கள் பின்தொடர்ந்து தாக்கி அழித்தன.
வருடக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிக்குமென்று எதிர்பார்த்த இந்த யுத்தமானது, ஆறு நாட்களில் முடிவடையுமென்றும், தாங்கள் பாரிய வெற்றியடைவோமென்றும் இஸ்ரேல் கனவிலும் நினைக்கவில்லை. இஸ்ரேலின் இந்த துணிச்சலான தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா பல விதங்களில் உதவியது.
இறுதியில் இந்த யுத்தத்தில் எகிப்தின் சினாய் பிரதேசத்தையும், சிரியாவின் கோலான் குன்றினையும் மற்றும் காசா பிரதேசம், ஜெருசலம், மேற்குக்கரை, ரமல்லாஹ் ஆகிய நகரங்களையும் இஸ்ரேல் கைப்பேற்றியது. .
பணத்துக்காக காட்டிக்கொடுக்கும் துரோகிகளினால் இஸ்ரேலுக்கு உளவாளியாக இருந்து செயல்பட்டதனால்தான் அன்று அரபு நாடுகளின் திட்டம் தோல்வியடைந்தது.
இந்த தாக்குதல் பற்றிய ரகசியத்தினை இஸ்ரேலுக்கு கூறாமல் இருந்திருந்தால் அப்போதே இஸ்ரேல் என்றதொரு சட்டவிரோத தேசம் அழிந்திருக்கும். அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
தொடரும்............................

கருத்துகள்
கருத்துரையிடுக