முதலாவது தொடர்...............
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அதுபோல் உலக நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலுக்கும், அதன் நவீன ஆயுதங்களுக்கும் அச்சப்பட்டிருக்கையில், கண்ணுக்கு புலப்படாத வைரசின் தாக்கத்தினால் அமெரிக்கா உற்பட அனைத்து வல்லரசுகளும் இன்று மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றது.

உடலுக்குள் வைரஸ் புகுந்ததனால் அவர்களது நவீன ஆயுதங்கள் அனைத்தும் செல்லாக்காசாகிவிட்டது.

மனிதனை கொலை செய்வதற்கு அடுக்கடுக்காக புதிய புதிய தொளில்நுற்பங்களில் ஆயுதங்களை உற்பத்திசெய்து குவித்தவர்களினால், தன்னை கொல்வதற்கு தனது உடம்புக்குள் ஊடுருவிய கண்ணுக்கு புலப்படாத சக்தியை தடுக்க முடியவில்லை.     

கொரோனா வைரசினால் அதிகம் பாதிக்கப்பட்டு இன்று தனது எதிரி நாடுகளிடம் உதவி கோருகின்ற நிலைமைக்கு உலக பொலிஸ்காரனின் நிலை பரிதாபத்துக்குரியது. இதனை இறைவனின் தண்டனை என்ரு கூறலாம். 

தான் உருவாக்குகின்ற நவீன ஆயுதங்களை விற்பனை செய்து அதிக பணம் சம்பாதிக்கும் சந்தையாக இஸ்லாமிய நாடுகளை நம்பியிருப்பதுடன், அதன் எண்ணை வயல்களையும் சூறையாடிக் கொண்டு அதிக இலாபமீட்டுகிறது. 

ஆயுத விற்பனையை அதிகரிக்கும்பொருட்டும், தனது எடுபிடி நாடான இஸ்ரேலை திருப்திப் படுத்துவதற்காகவும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையில் இருக்கின்ற சிறியளவிலான மற்றும் பேசி தீர்க்கக்கூடியதுமான மத, வர்த்தக மற்றும் அரசியல் முறண்பாடுகளை பூதாகரமாக்கி அதனை ஊதிப்பெருப்பித்து அவர்களுக்கிடையில் போர்மூலச் செய்வதும் அமெரிக்காதான்.

அதுபோல் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இயக்கங்களை உருவாக்கி அவ்வியக்கங்களுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதும், பின்பு தன்னால் உருவாக்கப்பட்ட இயக்கங்களை அழிப்பதற்கு குறித்த நாடுகளுக்கு நவீன ஆயுதங்களை விற்பனை செய்வதும், அதன்மூலம் பெருமளவு பணம் சம்பாதிப்பதும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் ஒன்றாகும். 

சர்வதேசரீதியில் அமெரிக்காவின் தில்லுமுல்லு அரசியலுக்கும், திருகுதாளங்களுக்கும் மற்றும் இஸ்லாமிய முற்போக்கு சக்திகளை கொலை செய்வதற்கும் அதன் புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ களம் அமைத்துக் கொடுப்பதுடன், அதற்கு மேலதிகமாக இஸ்ரேலின் மொசாட் செயல்பட்டு வருகின்றது.

இஸ்லாமியர்களின் மூன்று புனித பிரதேசங்களில் ஒன்றான பாலஸ்தீனை அபகரித்து பலாத்காரமாக யூத ராஜ்யத்தை உருவாக்கி அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கி வருகின்றது அமெரிக்கா.

அதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்படுகின்ற நவீன ஆயுதங்களை முதன்முதலில் வழங்குவது இஸ்ரேலுக்குத்தான்.

மட்டுமல்லாது நீண்டகாலங்களுக்கு முன்பே இஸ்ரேலை அணு ஆயுத நாடாக மாற்றியதுடன், நீண்டதூர, குறுந்தூர ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு பேட்ரியட் சாதனங்கள், அமெரிக்காவின் அதிநவீன தாக்குதல் விமானங்களான F35 ஆகியவற்றினை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. 

ஆனால் மேலே கூறப்பட்ட ஆயுதங்களில் விமான எதிர்ப்பு ஏவுகனைகளைத் தவிர, நீண்டதூர ஏவுகணைகள், F35 போர் விமானங்கள் போன்ற ஆயுத சாதனங்களை மத்தியகிழக்கில் உள்ள எந்தவொரு இஸ்லாமிய நாடுகளுக்கும் விற்பனை செய்வதில்லை என்பது அமெரிக்க செனட்டின் தீர்மானமாகும்.

அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்துவிடும் என்பதுதான் அதற்கு காரணமாகும். 

அத்துடன் இஸ்ரேலை சுற்றியுள்ள எந்தவொரு இஸ்லாமிய நாடுகளின் கைகளிலும் அணு ஆயுதங்கள் வந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் கவனமாகவும் விழிப்பாகவும் இருந்துவருகின்றது.   

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

நாளை தொடரும்..........................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.