ஒருதலைப்பட்சமாக தான் நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாகப் பரவும் வதந்திகளுக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், கொவிட் 19 பிரச்சினைக்குள் அரசமைப்பு பிரச்சினை தேவையில்லை என்றும், தான் ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தைக் கூட்டப்போவதாக பரவும் வதந்தி பொய்யானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், முரண்பாடுகளின் போது நீதிமன்றக் கட்டளைக்கு மதிப்பளிப்து தனது கடமையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  
இதேவேளை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், அரசமைப்பு பேரவை இன்று (23)  கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கொரோனாவு பிரச்சினைக்குள் அரசியலமைப்புப் பிரச்சினை தேவையில்லை. நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது. பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.