வரலாற்று நாயகன் மருதநாயகம் - 🖊பஸ்ஹான் நவாஸ்



காலனித்தவ நாடுகளின் பிடியில் இருந்து நாடுகளை மீட்க முஸ்லிம்கள் மகத்தான பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறாரார்கள் பிரித்தானியருக்கு எதிராகப் போராடிய இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போராட்ட வீரர் மருதநாயகம் அவர்கள் பற்றி ஆராய்கின்றோம்.

முஹம்மத் யூசுப் கான் அவர்களே இந்திய வரலாற்றில் மருதநாயம் என்று அடையாளப்படுத்தப்டுத்தப்படுகிறார்கள்.

 ஆயுதங்கள் துளைக்காத உடலைக்கொண்ட ஒரு மனிதன் 18ம் நூற்றாண்டில் வாழந்த ஒரே மனிதன் மருதநாயகம் மட்டுமே என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

 இந்தியாவின் தமிழ்நாடு ராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டில் பிறந்தார். மருதநாயகத்தின் குடும்பத்தினர் இந்து வேளாளர் குலத்தை சேர்ந்தவவர்கள்.

 மருதநாயகம் என்று அழைக்கப்படும் யூசுபப் கான் அவர்கள் சிறுவயதில் முகம்மது கமல் என்ற இராணுவ வைத்தியரால் வளர்க்கப்பட்டர். மருதநாயகம் என்ற அழைக்கப்படும் முஹம்மத் யூசுப் கான் அவர்கள் சிறுவயது முதல் யோகா, வர்மக்கலை ஆகிய துறைகளில் ஆழமான பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். முறைசார் கல்வியின் மீது ஆர்வங்காட்டாமையினால் மருதநாயகம் சொந்த ஊரான பனையூரை விட்டு வெளியேறினார்.

பிரான்ஸ் ஆட்சியாளர்களின் பிரதான தளமாக இருந்த பண்டிச்சேரியை சென்றடைந்த மருதநாயகம் அன்றைய பிரான்ஸ் ஆளுனராக இருந்த பணியாற்றி மோன்சர் ஜக்வாஸ் அவர்களின் வீட்டில் பணியாளாக இணைத்துக்கொள்ப்பட்டார்.

 சிறிது காலம் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த போது,   மோன்சர் ஜக்வாஸ் அவர்களின் வீட்டில் இடம்பெற்ற திருட்டும் சம்பவத்திற்கும் மருதநாயகம் யூசுப் கானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் மருதநாயகம் குற்றவாளியாக இனங்கானப்பட்டார். மருதநாயகத்தின் இரண்டு காதுகளும் இதன் போது வெட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் Samuel Charles Hill அவர்கள்  அவர்கள் The Rebel Commandant என்ற நூலில் குறிப்பிடுகிறார்.


 பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து இருந்து அவர் தஞ்சாவூர் பயணமானார். தஞ்சாவூரில் இராணுவ சிப்பாயாக பணியாற்றிய காலத்தில் மருதநாயகம் முகம்மத் யூசுபுக்கு பிரித்தானிய கட்டளைத் தளபதியான கப்டன் பிரண்டன் அவர்களின் தொடர்ப்பு கிடைத்தது. தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீஷ், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கப்டன் பிரன்டன் இடமிருந்து கற்றுக்கொண்டார். கற்றுத் தேர்ந்தார். மருதநாயகம் பின்னர் தஞ்சாவூரில் இருந்து இந்தியாவின் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் அமைந்துள்ள நெல்லூருக்கு மாற்றப்பட்டார். அங்கு தண்டல்காரனாக அதாவது  வரிசேகரிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார். ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் மருதநாயகம் பணியாற்றினார்.

இதே காலத்தில் ஆற்காட் நவாபுகளின் தொடர்ப்பு மருதநாயகத்திற்கு கிடைத்தது.
ஆற்காடு நவாப் இஸ்லமிய கிலாபத்தின் 2ம்  கலிபா உமர் பின் கத்தாப் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 1690ம் ஆண்டு முதல் 1801ம் ஆண்டு வரை தென் இந்தியாவை ஆட்சிசெய்தார்கள்.  1692ம்ஆம் ஆண்டில் முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப் அவர்களினால் நவாப்கள் கர்நாடக்கா உட்பட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்யவதற்காக நியமிக்கட்டார்கள்.

 முதலில மன்னர் அவுரங்கஸீப் அவர்களினால் நவாப் சுல்பிக்கார் அலி என்பவரே நவாபாக நியமிக்கப்பட்டார். இவர் மராட்டி மற்றும்  விஜயநகரப் பேரரசுகளை முறியடித்து வெற்றி பெற்றவர். துமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்காட் என்ற நகரமே ஆற்காடு நவாபுகளின் தலைநகராக இருந்தது.

கி.பி 1750;ம் ஆண்டு காலப்பகுதியில்  பிரித்தானியருக்கும் , பிரன்ஞ் படையினருக்கும் இந்தியாவை தக்க வைப்பதற்கான யுத்தம் நடந்தது.  இதேவேளை 1751 இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு யார் நியமிக்கப்பட வேண்டும் என்ற போட்டி வலுடைந்தது.  முகமது அலி வாலாஜாவுக்கும், சந்தா சாஹிப்பிற்கும் இடையில் அதிகாரத்திற்கான போட்டி வலுடைந்து அது யுத்தமாகப் பரிணமித்தது. சந்தா சாபிற்கு ஈடுகொடுக்க முடியாத முகம்மது அலி வாலாஜா திருச்சிக்குத் தப்பித்துச் சென்று பிரித்தானியரிடம் சரணடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை ரொபட் கிளைவ் தலைமையில் பிரித்தானியர்கள் முறியடித்தார்கள்.

முகமது அலி வாலாஜாவுக்கு பிரித்தானியர்கள் ஆதரவளித்த வேளை சந்தா சாஹிப்பிற்கு ஆதரவாக பிரான்ஸ் படையினர் செயற்பட்டார்கள். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன்        ராஸா சாஹிப் தலைமையில் 10,000 படை வீரர்களை அனுப்பி வைத்தார்.  இவர்களுக்கு ஆதரவாக,  நெல்லூரின் தலைமை வரிசேகரிப்பாளராக மருதநாயகம் யூசுப்கான் செயற்பட்டார்.

 யுத்தத்தில் பிரான்ஸியரின் ஆதரவுடன் செயற்பட்டட  சந்தா சாஹிப்பின் படை தோல்விகண்டது. பிரித்தானியர்கள் முகமது அலி வாலாஜாவை 1749ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ம் திகதி நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரையிலும் நெல்லூரில், வரி சேகரிக்கும் உரிமையை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கினர் நவாப் முகமது அலி வாலாஜா இதேவேளை யுத்தக்களத்தில் மருதநாயகம் முகமது யூசுப்கானின் திறமைகயைக் கண்டு வியந்த பிரித்தானிய படைத்தளபதி ரொபர்ட் கிளைவ், தனது படையுடன் அவரை இணைத்தார். மேஜர் ஸ்ரிங் லோரன்ஸ் யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார். .
பிரஞகார்களுடன் நடந்த பல்வேறு யுத்தங்களில் பிரித்தானியர்களின் வெற்றிக்கு யூசுப்கான் சாஹிபின் பங்கு மகத்தானது. அதனால் பிரித்தானிய தளபதி மேஜர் லோரன்ஸ் யுசுப் கான் அவர்களை சிப்பாய் படைகளுக்குத் தளபதியாக நியமித்து கான் சாஹிப் எனும் பட்டமும் தங்கப் பதக்கம் வழங்கி வைத்தார். அன்று முதல் அவர் 'கமாண்டோ கான் சாஹிப்' என அழைக்கப்பட்டார்

வெள்ளையனே வெளியேறு என்ற கோசத்தை முதலில் முன்வைத்  பிரித்தானியருக்கு எதிராகப் போராடிய மன்னன் புலித்தேவனையும் மருதநாயகம் கொலைசெய்தார்.

மருதநாயகம் அவர்கள் 1757ம் ஆண்டில் மதுரையின் ஆளுனராக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலியின்  கவர்னராகவும் அவர் பதவி உயர்வு பெற்றார். இந்தக் காலத்தில் மருதநாயகம விவசாயத்;துறையின் முன்னேற்றத்திற்காக மகத்தான பங்களிப்புக்களை நிறைவேற்றினால். இந்துக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அவருக்கு அதிகம் கரிசனை இருந்ததது.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் சென்னையில் இருந்தன. இந்த அனைத்துச் சொத்துக்களும் கொள்ளைக்கூட்டத்தவர்களான மகாதேவன்கள்ளால் சூறையாடப்பட்டன.

 மீனாட்சி அம்மன் கோயிலின் சொத்துக்களை கோயில் நிர்வாகத்திடன் திரும்ப ஒப்படைக்குமாறு மருதநாயம் யுசுப் கான் அவர்கள் கொள்ளைக் கூட்டத்திற்கு தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துவந்தார். ஆனால் அவர்கள் மருதநாயகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. இதனால் மகாதேவன்களுக்கு  எதிரகப் போராடுவது என மருதநாயகம் யூசுப்கான் தீர்மானித்தார். மீனாட்சி அம்மன் கோயிலின் சொத்துக்களை கொள்ளையிட்;ட கும்பலுக்கெதிரான போராடத்தை ஆரம்பித்தார். மிக வேகமான முறையில் மகாதேவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.

மகாதேவர்கள் கைப்பற்றி சொத்துக்கள் அனைத்தையும் மருதநாயகம் யூசுப்கான் மீள ஒப்படைத்தார். மருதநாயகத்தால் மகாதேவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பல பொருட்கள் இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின்  வைக்கப்பட்டுள்ளன. மதுரையைச் சுற்றிய  பகுதிகளில் திருடர்களும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும்   தாங்க முடியாத அளவுக்கு மக்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

மக்களுக்கு மத்தியில் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வந்தது. கவர்னர் கான் சாகிப் களத்தில் இறங்கினார். கள்ளர்கள் ஒழிக்கப்பட்டனர். நத்தம் என்கிற பகுதியில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட திருடர்கள் கொல்லப்பட்டதாக  வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருதநாயகம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சிறந்த முறையில் அமுல்படுத்தினார். தான் ஒரு முஸ்லிமாக இருந்த போதும் இந்துக்களின் உரிமைகளை பேணிப்பாதுகாத்துவந்தார்.  மருதநாயகம் மதுரை நகரத்தின் ஆளுனரகத் தெரிவுசெய்யப்பட முன்னர் மதுரை  அழகர் கோயிலை கைப்பற்றியிருந்தார். ஆளுனர் பதிவியை ஏற்றுக்கொண்டதன்  பின்னர் மதுரை  அழகர் கோயிலை இந்து மக்களிடம் அவர் ஒப்படைத்ததார் என்று வரலாற்று ஆசிரியர் கே.என் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.

நவாபுக்கும், கம்பெனிக்கும் வருமானம் அதிகரித்தாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினார்கள். பொறாமை காரணமாக ஆற்காடு நவாபு முகமது அலி, முகமது யூசுப்கானின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சித்தார்.

 மருதநாயகம் வசூலிக்கும் வரித்தொகையைத் தன்னிடமே செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும், மற்றவர்களும் தன் மூலமாகவே வரிகளை செலுத்த வேண்டும் எனவும் நவாப் உத்தரவிட்டார். இதற்கு பிரித்தானியர்கள் ஆதரவளித்தது. ஆளுனராக இருந் மருதநாயகம் நவாபின் பணியாள் என்று அறிவித்ததைத் தொடர்;ந்து மருதநாயகம் பிரித்தானியரின் பகையாளிகாக மாறினார்.

பிரித்தானியர் அவரை கைதுசெய்ய உத்தரவிட்ட போது மருதநாயகம் தன்னைத்தானே சுல்தானாகப் பிரகடனப் படுத்தினார்.

தெற்குச் சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், 'யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளார்' என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும் நவாபும் யூசுப்கானைக் கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். 'தன்னை சுதந்திர ஆட்சியாளன்'' என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினார் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தார். அவருக்கு ஆதரவாகப் பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

1763 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரித்தானியர் மதுரையைத் தாக்கினாரகள்.  1764 ஓக்டொபர் மாதம் 13ம் திகதி யூசுப் கான மருதநாயகம் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ , பாபாசாஹிப் மாளிகையில் அவர்களின் குடும்ப உறவினர்களால்  கைதுசெய்யப்பட்டு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். 1764ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ம் திகதி மருதநாயகம் தூக்கிலிடப்பட்டார். ஆனால் மூன்று தடவைகள் தூக்கிலிடப்பட்டும் அவர் மரணிக்கவில்லை. இறுதியாக வர்மக்கலை வல்லுனர்கள் மருதநாயகத்தின் நரம்புகளை செயலிழக்கச் செய்து மரதநாயகம் கொலைசெய்யப்பட்டார்கள்.

 மருதநாயகத்தின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க 1997ம் ஆண்டில் கமல் ஹாசன் முடிவுசெய்தார். இந்த நிகழ்வில் பிரித்தானிய மகாராணியாரும் கலந்துகொண்டார். இசைஞானி இளையராஜாவும் இதற்கு இசையமைக்க முன்வந்தார். ஆனால் நிதிநெருக்கடியினால் இந்த முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது. கடந்த ஆண்டில் இதனை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நினைவுகூரப்படும் நாள் வரை மருதநாயகம் உயிர்வாழ்ந்துகொண்டிருப்பார்.

பஸ்ஹான் நவாஸ்
இலங்கை

கருத்துகள்