உலகமே
தனிமைப்பட்டிருக்கும்போது
என்
தனிமையைப்போக்கவந்த
தலைப்பிறையே வா....

உன்
முதல்புன்னகையில்
உளங்குளிர்ந்து போனதே
இன்று...

ஓராண்டுக்குப்பின்
உனையடைவதில்
ஆயிரமாயிரம் ஆசைகள்...

என்
தூக்கம்தொலைத்த
தலைப்பிறையே
உன்
முப்பதுநாளில் ஒருநாள்
உன்மடியிலே
உயிர்விடும் ஆசை...

உன்னால்
பசித்து மகிழ்கிறேன்..
உன்னால்
விழித்திருந்தும் மகிழ்கிறேன்
நீ
வியந்து நயப்பதால்
வஹியெனும் கவிதையை
வாசித்தபடியே
பொழுதுகழிப்போன்...

என்
உடல் பொருள் இதயத்தை
சலவைசெய்து
நறுமணம்பூசி புத்தாடைபூட்டி
பிரிந்துபோகும்போது
உள்ளுக்குள்ளே அழுகிறேன்...

அடுத்தமுறை
நீவரும்போது
நானிருப்பேனோ நானறியேன்
என் இனிய
இளம்பிறையே....ஏனெனில்
கொரோனா எமை
சூழ்ந்துவிட்டது....

யூஸுப் லுக்மான்
வரக்காபொல.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.