ஐந்தாவது தொடர்..........................

இஸ்ரேலின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பின்னணியில் பக்கபலமாக இருப்பது அமெரிக்கா. அதேபோல் தன்னால் முடியாத புலனாய்வுத் தகவல்களையும், சில அதிரடி நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மூலமாக இன்றுவரை அமெரிக்கா சாதித்து வருகின்றது.

அந்தவகையில் அன்றைய சோவியத் ரஷ்யாவின் அணு ஆயுதம் பற்றிய ரகசியங்கள், மற்றும் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது ரஷ்யா அதிபர் ஸ்டாலின் செய்த படுகொலைகள் பற்றிய ஆவணங்களை அமெரிக்காவுக்கு மொசாட் வழங்கியது.

அத்துடன் அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த சோவியத் ரஸ்யாவினால் அதி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட மிக் ரகத்திலான சுப்பர் சொனிக் போர் விமானத்தின் தொழில்நுட்பத்தினை அறிவதற்கு எவ்வளவு முயன்றும் அமெரிக்காவால் முடியவில்லை. இறுதியில் குறித்த விமானத்தையே கடத்திக்கொண்டு அமெரிக்காவிடம் கையளித்தது இஸ்ரேல்.

இவ்வாறான இஸ்ரேலின் உதவிகள் எப்போதும் அமெரிக்காவுக்கு அவசியமானது. அதனால் இஸ்லாமிய நாடுகளுக்காக இஸ்ரேலை பகைத்துக்கொள்ளும் நிலையில் அமெரிக்கா இல்லை.

மாறாக இஸ்ரேலுக்காக உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளையும் அழிப்பதற்கு தான் தயாராகவே உள்ளேன் என்பதனை அமெரிக்கா நிரூபித்துள்ளது. 

பாலஸ்தீன மண்ணை திருட்டுத்தனமாக அபகரித்துக்கொண்டு உருவாக்கிய தனது நாட்டை பாதுகாப்பதற்காக இருபத்தி நான்கு மணிநேரமும் விழி மூடாமல் கண்காணிப்பதில் மிகவும் கவனமாக இருந்துவருகின்றது இஸ்ரேல்.

அவ்வாறான பலமான நிலையில் உள்ள இஸ்ரேலுடன் களத்தில் மரபுப்போர் முறையிலும், கெரில்லா முறையிலும் அங்குள்ள இஸ்லாமிய போராளிகள் போரிடுவதென்றால் அது கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாகும்.

யாசீர் அரபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக போர்புரிந்தது. இறுதியில் அவர்கள் இஸ்ரேலை அங்கீகரித்துக்கொண்டு போர் செய்வதிலிருந்து விலகி சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

ஆனால் இஸ்ரேலை அங்கீகரித்ததனை பாலஸ்தீன மக்கள் ஏற்கவில்லை. அதனால் ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய போராட்ட அமைப்புக்கள் தோன்றியதுடன், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஆகியன இஸ்ரேலிய இராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போர்புரிந்து வருகின்றது.

ஆரம்பத்தில் சிறிய இயக்கமாக உருவாகி பின்பு இஸ்ரேலுடன் போர் புரிந்தவாறே இவ்வியக்கங்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டன. அங்கு போர்புரிவதற்கு ஏற்ற அடர்ந்த காடுகளோ அல்லது பரந்த நிலப்பரப்புக்களோ இல்லை.

அப்படிப்பட்ட குறுகிய பிரதேசத்தில் இஸ்ரேலின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு போராளிகளுக்கு பயிற்சி வழங்குதல், ஆயுத விநியோகம் செய்தல், அதனை பாதுகாத்தல் என அனைத்து போராட்ட கட்டமைப்பு வேலைகளையும் செய்து இஸ்லாமிய போராட்ட இயக்கங்களை கட்டிக்காப்பது என்பது ஒரு சாதாரண விடயமல்ல.

இதற்கிடையில் போராளிகளை காட்டிக்கொடுப்பதற்கு மொசாட்டின் உளவாளிகள் பாலஸ்தீன மண்ணில் மிக இரகசியமாக செயல்பட்டு வருகின்றார்கள். இவர்களின் காட்டிக்கொடுப்பினால் இதுவரையில் ஏராளமான போராளிகள் இஸ்ரேலிய தாக்குதலினால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த காட்டிக்கொடுப்பாளர்கள் வேறுயாருமல்லை. அவர்களும் முஸ்லிம் பெயர் தாங்கிகள்தான். இஸ்ரேல் வழங்குகின்ற பணத்துக்காக புனித போராளிகளை காட்டிக்கொடுப்பது இவர்களது தொழிலாகும்.

இவ்வாறு காட்டிக்கொடுக்கும் ஒற்றர்களை இனம் கண்டு அவர்களை மக்கள் முன்பாக போராளிகளினால் பகிரங்கமாக மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதுண்டு.

இஸ்ரேல் உருவானதிலிருந்து இன்றுவரைக்கும் பாலஸ்தீன மண்ணில் ஏராளமான யுத்தங்கள் நடைபெற்றுள்ளது.

யுத்தங்கள் தவிர்ந்து இஸ்ரேல் இராணுவத்தினர்களின் கெடுபிடிகளும், துப்பாக்கிப் பிரயோகங்களும் அடிக்கடி நடைபெறுவது வழமை.

இவ்வாறு இஸ்ரேலிய பயங்கரவாத இரானுவத்தினரால் இதுவரையில் கொல்லப்பட்ட பாலஸ்தீன முஸ்லிம்களின் எண்ணிக்கை பல இலட்சங்கள்.

அத்துடன் காயமுற்றவர்கள், காணாமல் போனவர்கள், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள், அகதிகளாக சென்றவர்கள் என மொத்த எண்ணிக்கை பல மில்லியன்கள் ஆகும்.   

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

நாளை தொடரும்...............

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.