ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே விதமான சொற்கள்.. கொவிட் , கொரொனா , கர்பியூ போன்ற வார்த்தைகளை தினமும் கேட்க வேண்டியதாயிருக்கின்றது. காதுகளும் மனதும் ஒரே வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு நொந்து போய்விட்டதென்பேன். எப்போது இந்த நிலைமை மாறும் ? ஏன் இப்படி ? சோதனையா ? கஷ்டமா ? என்ற பலவித கேள்விகளுக்கு 'தெரியாது' என்று ஒரு பதில் தான்.
அதற்கு மேல் அதனைப் பற்றிய அறிவு படைத்தவனுக்கே... இந்த நெருக்கடி மிக்க சூழல் பல மனித குணங்களை மாற்றி விட்டது. உள்ளதைப்போதுமாக்கிக் கொள்கிறார்கள்.இல்லாமைக்கு உதவுகிறார்கள். ஆடம்பரம் வெளியேறிவிட்டது, அத்தியாவசியம் கடமையாகியுள்ளது. இருப்பவர் இல்லாதவர்களுக்கு கொடுத்துதவுகிறார்கள். பண்டமாற்று நிகழ்கிறது. இந்த நிலை எவ்வளவு தூரம் நீளுமென தெரியாது.
பிள்ளைகளையும் , முதியவர்களையும் பாதுகாப்போம். வீட்டிலிருப்போம். முடிந்தளவு ஏனையோருக்கும் உதவுவோம். பிரார்த்தனை புரிவோம்.. !!!

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.