(அஷ்ரப் ஏ சமத்)

நேற்று முன்தினம் (15) ஏப்ரல் 2020 ஒர் முஸ்லிம் வா்த்தகா் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்திருந்தார்.தம்பி உங்களது தொலைபேசி இலக்கத்தினை மாவனல்லையில் உள்ள  ஓர் ஊடகவியலாளா் வழங்கியிருந்தாா் உங்களிடம் பேசும்படி ஓகே பேசுங்கள்.

 எனக்கு களுபோவிலையில் ஒரு கெமிக்கல் பெக்டரி உள்ளது. அதனோடு ஒத்தாக ஒரு பெரிய காணித் துண்டும உள்ளது.  அந்தக் காணியில் அப்பிரதேசத்திழ் வாழ் இளைஞா்கள்,  விளையாடுவாா்கள். அவா்களுக்கு ஏதும் சடங்குகள் வாகனங்கள் தரிப்பிடம், அல்லது மரண வீடு போன்ற பல நிகழ்வுகளுக்கும் அந்த காணியை பயன்படுத்த வழங்குவேன். அதில் ஒரு பெரும்பான்மை இன குடும்பம் ஒன்று  காணியில் வீடு கட்டி சட்டவிரோதமாகவும் வாழ்கின்றாா்கள்.

 அதற்கென நீதிமன்றில் சிவில்  வழக்கும் ஒன்றும் உள்ளது.  ஆனால் கடந்த ஊரடங்கு பிறப்பித்தால் அங்கு யாரும் இல்லை. பாதுகாப்பு உத்தியோகத்தரும் இல்லை. 5 நாட்களுக்கு முன் 4 இளைஞா்கள் அங்கு வந்து எனது காணியில் நடமாடியுள்ளாா்கள் அதன் பின்  எனது பெக்டரிக்கு நெருப்பு வைத்து விட்டு ஓடிவிட்டாா்கள். அதன் பின்னா் அருகில் உள்ள குடும்பம் எனக்கு அறிவித்து கொஹுவலை  பொலிஸ்  வரவழைக்கப்பட்டு அவா்கள் ஊடாக  4 தீயணைப்பு வண்டிகள் வந்து ஒருவாறு ஒரு பகுதி  மட்டுமே தீப்பற்றி இருந்தது அதனை  அனைத்து விட்டாா்கள். சீசீரி கமராவும் உடைக்கப்பட்டுள்ளது.

ஹார்ட் டிஸ்க் ரிகவரி பண்ணி பாா்ப்பதற்கும் வசதி இல்லை.  ஆனால் மீண்டும் அந்த 4 இளைஞா்கள், அடுத்த நாளும் வந்துள்ளாா்கள். அருகில் உள்ள குடும்பம் எனக்கு தகவல் தந்தாா்கள்.  மீள நான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்து, அவா்கள்  வந்ததும் ஓடிவிட்டாா்கள். மீண்டும், அவா்கள் வந்து அருகில்  உள்ள அந்த  பெரும்பான்மைக் குடும்பத்தினை ஏன் தகவல் கொடுத்தாய் எனத் தாக்கியுள்ளாா்கள். கணவனும்  மனைவியும் தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டாா்கள் என தெரிவித்தாா். இதனை இலக்ரோனிக் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியாதா எனக் கேட்டாா்.  நானும் எனக்குத் தெரிந்த சக இலக்ரோனிக் ஊடகவியலாளா்களுக்கும் தகவல் கொடுத்தேன்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.