கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப் மற்றும் பிற செய்திகள்


கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம்.
அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது.
கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது.
இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது.
இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த காணொளியை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து காணொளிகளையும் நீக்குகிறது.
(BBC)

கருத்துகள்