உற்பத்தியாளர்களிடமிருந்து மரக்கறிகளை மொத்தமாக கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் இன்று ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ் தம்புள்ளை பிரதேச்தில் சில இடங்களில் பிரதேச செயலாளரின் தலைமையில் மரக்கறிகள் இவ்வாறு மொத்தமாக கொள்வனவும் நடவடிக்கை ஆரம்பமானது.
உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, இதற்கான நிதியை பொருளாதார மத்திய நிலையம் வழங்கும்.
தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் .இதற்காக விசேட விலை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தின் பிரதேச செயலாளர் அலுவலகம் மரக்கறிகளை கொள்வனவு செய்யும் என்றார்
(அரசாங்க தகவல் திணைக்களம்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.