இலங்கையில் முதலாவது லொக்டவுன்  பிரதேசமாக அறிவிக்கப்பட்ட தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை அரசாங்கத்திற்கு புதிதானது, அதைவிட அட்டுலுகமைமக்களுக்கு மிக மிகப் புதிதானது.

இயல்பிலேயே எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் அட்டுலகமை  மக்கள் இந்நிகழ்வை அழகாக கையாண்டனர்.

குறிப்பாக அட்டுலுகமை பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் நஜீப்,களுத்துறை மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவர் அல்ஹாஜ் அப்துர்ரஹ்மான் (பஹ்ஜி) ,அட்டுலுகமை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் அல் ஹாஜ் பாஹிம் (முப்தி) ஆகியோரோக் கொண்ட நிர்வாக்குழு ஊரின் விடயங்களில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்தனர் .இவர்களுக்கு பக்க பலமாக ஊரில் உள்ள கற்ற சமூகம் ,இளம் வியாபாரிகளும் தொழிற்பட்டனர் .

முக்கியமாக மூன்று  தீர்மாணங்கள் உறுதியாக பெறப்பட்டது .

01.சுகாதார ,பாதுகாப்பு ,அரச நிர்வாகத் துறையுடன் முழுமையாக ஒத்துழைப்பது

02.ஊர்மக்களை இந்த நோயின் ஆபத்து குறித்து அறிவூட்டுவது .

03.ஊர் மக்களின் அடிப்படைத்  தேவைகளை இயன்றவரை நிறைவேற்றுவது .

ஊடகங்கள் சிங்கள மொழியில் செய்யப்பட்ட அறிவூட்டல் செயற்பாடுகள் அளவு தமிழ் மொழியில் செய்யப்படாமை அட்டுலுகமையையும் ஓரளவு பாதித்தது.

இந்த வகையில் மொத்த சமூகத்தையும் அரச இயந்திரத்துடன் ஒத்துழக்குமாறு வழிகாட்டப்பட்டது .ஆரம்பமாக நோயின் ஆபத்து தொடர்பில் ஊரில் உள்ள எல்லா இடங்களிலும் அறிவுறுத்தல் செயற்பாடு செய்யப்பட்டது .லொக்டவுன பன்னி சில நாட்களில் பாதுகாப்பு தரப்பு ஊரிற்கு வருவது குறைந்த்தை அடுத்து சிலர் சுயாதீனமான சுற்ற எத்தனித்த போது அதானின் பின் பள்ளிவாயல்கள் மூலம் அறிவூட்டப்பட்டது.

உணவுத் தேவைகளை மக்கள் கஷ்டங்களை சுமந்து பொறுமையுடன் கையாண்டனர் ,எந்த அளவிற்கு எனின் வினியோகக் குழு உணவுகளை வழங்கும் போது ஊரில் வாழும் சிங்கள மக்களையும் அரவனைத்தே செயற்பட்டது .ஊரில் உள்ள இளம் வியாபாரிகள் சிலர் ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பணத்தை இட்டு ஊர் மக்களுக்கு குறைந்த விலையில்  உணவை வாங்குவதற்கு உதவி செய்தனர் .(பலர் வெளியில் இருந்தும் உதவிகளை அனுப்பினர் ) நிச்சயம் அந்த வியாபாரிகள் இட்ட பணத்தில் ஒரு தொகை நஷ்டமடையும் .ஆனால்  பெற்ற பயன்கள் பல கோடி பெறுமதியானது .

பானந்துறை வைத்தியசாலை வைத்தியர்கள் Dr Ismi Mohamed ,Dr Fahim ,மற்றும் ஏனைய வைத்தியர்கள் செய்த உதவிகளை அட்டுலுகமை மக்கள் மறக்க மாட்டார்கள் ,ஊர் லொக்டவுனில் இருந்த போது கூட அவர்கள் ஊர்மக்களுக்கு அறிவூட்டினர் .நோயாளிகளை கையாள்வதில் பாரிய உதவிகளைச் செய்தனர்.

இன்னொரு விடயத்தை கட்டாயம் சொல்லியாக ஆக வேண்டும் எவ்வளவுதான் இனவாத ஊடகங்கள் பிரச்சாரம் செய்தாலும் ,அட்டுலமையை சுற்றி உள்ள சிங்கள மக்கள் செய்த உதவிகள் மகத்தானது .பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் .

அட்டுலுமையில் கணிசமான அளவு காதிரிய்யதுன் நபவிய்யா தரீக்காவை
சேர்ந்தவர்களும் வாழ்கின்றனர்.
 நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர், அவர்களது முரீதுகளை கண்டிப்பாக வீடுகளில் இருக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஆரம்ப நோயாளியுடன் தொடர்பு பட்டவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களிற்கு தைரிய மூட்டி ஓடி ஒழியாமல் அனுப்பி வைத்த பெற்றோர்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள் அவர்கள் எடுத்த மிகச் சரியான முடிவு நல்ல விளைவைத் தந்தது.

நிர்வகித்த முறையிலும் ,உணவு வினியோகத்திலும் ,கட்டுப்பட்டு நடப்பதிலும் சில ,பல குறைபாடுகள் இருக்கலாம் .ஆனால் ஊடகங்கள் ஊரில் பெருப்பித்த அளவிற்கு பெரிய குறைபாடுகள் இருக்கவில்லை .

அட்டுலுகமைக்கு என்று ஒரு வரலாறு உள்ளது ,அவர்கள் ரைகம் பண்டார மன்னரை போர்துக்கேயறுடன் போராடி காத்தனர் .அது அட்டுலுகமை மக்கள் எதிர் கொண்ட மிகப் பெரிய சோதனை அதில் அவர்கள் வெற்றி பெற்றனர் .அதன் ஞாபகார்த்மாக இன்றும் ஊரில் ஜயகொடி கந்த (வெற்றியின் சிகரம் ) என்ற ஒரு இடம் உள்ளது .அதன் பின்பு மக்கள் எதிர் கொண்ட ஒரு பெரிய சோதனையை இறைவன் துனையால் மக்கள் வெற்றி கொண்டனர் .

தொடர்ந்தும் இந்த நோயில் இருந்து பாதுகாப்பு பெற பிரார்திப்போம்.

எம்.என். முஹம்மத்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.