காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் மாத்தளையில் மரணம்


காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய பெண்ணொருவர் சுவசெரிய அம்பியூலன்ஸ் வண்டியில், தம்புளை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை- நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான குறித்த பெண்ணின் மகன், நீர்கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி, 10 நாள்களுக்கு முன்னர் வருகைத் தந்துள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தப் பெண் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியா மரணமடைந்தார் என்பதை கண்டறிவதற்காக இவரது இரத்தமாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
(TamilMirror)

கருத்துகள்