அட்டுலுகமையில் மனிதாபிமான நெருக்கடி இல்லை



தற்போது வெளி ஊரில் வசித்தாலும், அங்காங்கே ஊடகங்களில் வரும் சில செய்திகளை வைத்து தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டும் முகநூலில் Inbox மூலமும் அட்டுலுகமை தொடர்பாக கேட்கின்றனர். அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் இந்தப் பதிவை இடுகின்றேன்.

அட்டுலுகமை Lock down செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் அட்டுலுகமை மக்கள் சில சிரமங்களை எதிர் கொண்டமை உண்மைதான் .ஆனால் அட்டுலுகமையின் இளம் வியாபாரிகள்  ஊரில் உள்ள  நிலமையின் பாரதூரத்தை விளங்கி தனது சொந்தப் பணத்திற்கு பெருமளவு அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்து மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதள்கு ஆவண செய்தனர்.இது நல்ல முன்மாதிரியான செயற்பாடாகும்.

அதன் பின்பு மக்களின் அன்றாட செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை  எல்லா பள்ளி நிரவாகங்களின் தீர்மானத்திற்கு அமைய அட்டுலுகமை பள்ளி வாயல் சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் நஜீப் ஹாஜியார் ,களுத்துறை மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவர் அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) ,அட்டுலுகமை ஜம்மியதுல் உலமா தலைவர் பாஹிம் (முப்தி) ஆகியோர் தலமையில் ஒரு நிறைவேற்று குழு அமைக்கப்பட்டு எல்லா விடயங்களும் ஒழுங்கு படுத்தப்பட்ன .இவர்களுக்கு தேவையான்ஆலோசனைகளையும் உதவிகளையும் ஊர் மக்களும் , ஊரில் உள்ள படித்த புத்திஜிவிகளும் தொடர்ந்து வழங்குகின்றனர்.இதற்கு அப்பால் பலரும் தனிப்பட்ட முறையில் தொழிற்படுகின்றனர்.

சுகாதாரம் ,கல்வி ,நிதி ,அரச தொடர்பு ,...என பல்வேறு குழுக்களை அமைத்து ஒரு பரந்துபட்ட நிர்வாக ஒழுங்கு செயற்படுகிறது.
ஏனெனில் ஊரில் நோய்வாய்ப்படும் நோயாளிகளை வெளியே அனுப்புவதும் ,வெளியில் எடுப்பதும் ஒரு சாதாரண விடயமல்ல அவர்களுக்கு கொரோனா பரீட்சித்த பின்னரே வைத்திய சாலைக்கு அனுமதிக்கின்றனர் .இவற்றுக்கு பின்னால் உள்ள உழைப்பு ஊர் மக்களுக்குக் கூடத் தெரியாது .ஆனால் சிரமம் பாராது பலரும் தொழிற்படுகின்றனர் .அட்டுலுமையின் இரு பாடசாலைகளின் அதிபர்களான அதிபர் பாரிஸ் ,அதிபர் மன்சூர் ஆகிய இருவரும் ஏனைய ஊர்களைப் போல் online வகுப்புகளை அழகாக திட்டமிட்டு செய்கின்றனர் .

நேற்றைய தினம் அட்டுலுகமை ஜாமியா இனாமில் ஹசன் மத்ரஸாவை மையமாக கொண்டு இயங்கும் உணவு வினயோகக் குழு (ஊர்,வெளியில் உள்ள தனவந்தர்களின் உதவியுடன்)அட்டுலுகமயின் சகல குடும்பங்களுக்கும் (சிங்கள ,கிரிஸ்த்தவ மக்கள் உற்பட ) அடுத்த 5-6 நாட்களுக்குத் தேவையான உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது .எனவே அங்கே யாரும் பசியுடன் மரணிக்கின்றனர் என்ற செய்தி மிகவும் பிழையானது.

ஆனால் ஒன்றைத் தெளிவாக சொல்ல வேண்டும் ,ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று இதுவரை அரச உதவிகள் வந்து சேரவில்லை ,Lock down செய்யப்பட்டு 10 நாட்களின் பின்பு நேற்றுத்தான்(07.04.2020) பானந்துரை வைத்தியசாலையில் கடமையாற்றும்  வைத்தியர்கள் மூலம் ஊர் மக்களை அறிவூட்டும் செயற்பாடு நடை பெற்றது .

ஆனால் அரசு கொரோனா நோயாளிகளுடன் தொடர்புபட்ட வாலிபர்களை தனியாக எடுத்து மிகவும் சிறப்பாக பராமரிக்கின்றது .அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து அவர்கள் யாவரும் Negative ஆகி உள்ளனர் .என்பது இப்போதைக்கு மகிழ்ச்சியான விடயமாகும் ்.
அட்டுலுகமை தொடர்பான ஏதாவது விடயங்களை நீங்கள் அறிய விரும்பினால் அல் ஹாஜிகள் நஜீப் ,அப்துர் ரஹ்மான் (பஹ்ஜி) பாஹிம் (முப்தி )  ஆகியோர்களை தொடர்பு  கொள்ளவும் .ஆனால் சும்மா தகவல்களை அறிவதற்காக தொடர்பு கொள்ள வேண்டாம்.

எம்.என்.முஹம்மத்

கருத்துகள்