உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சரும் ஹெல உருமய கட்சி தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் நேற்று (21) ஊடக மாநாடொன்றை நடத்திய அவர், அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் இருந்தன. இருந்தும் தாக்குதலை தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னாள் பிரதமருக்கும் இந்த பொறுப்பில் இருந்து தப்ப முடியாது.
யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். புலனாய்வு பிரிவு வழங்கும் தகவல்களுக்கு அமைய அரச அதிகாரிகள் செயற்பாடாவிட்டால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரேனா தொற்றின் அச்சுறுத்தல் முடிவடைய முன்னர் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது. மக்களின் உயிர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். ஜூன் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதனை வரவேற்கிறோம். இருந்தாலும் அதற்கிடையில் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கான பொறுப்பை யார் ஏற்க இருக்கிறார் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.