வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை (விபரம்)

கொவிட் 19 வைரசு தொற்று உலகம் முழுவதம் பரவிவருவதையடுத்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொவிட் 19 வைரசு தொற்று பரவிவரும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் பணியாளர்களுக்கு பல நிவாரணங்கள்
கொவிட் 19 வைரசு தொற்று உலகம் முழுவதம் பரவிவருவதையடுத்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் பணியாளர்கள் தொடர்பில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
இதற்கமைவாக 16 வெளிநாட்டு தூதுக்குழுக்களில் தொழிலாளர் சேமநல பிரிவு மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த அவர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக 16 வெளிநாட்டுத் தூதுக்குழுகள் தொழிலாளர் சேம நலப்பிரிவிடம் தற்பொழுது பணியகத்தில் தொழிலாளர் சேமநல நிதியத்தின் மூலம் (workers welfare fund) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பேர் பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் துரிதமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த 16 வெளிநாட்டுத் தூதுக்குழுகள் அமைந்துள்ள தொழிலாளர் சேமநலப்பிரிவுகளுக்கிடையில் அபுதாபி, பஹ்ரேன், சைபிரஸ், டுபாய், இஸ்ரேல், ஜோர்தான், குவைட், லெபனான் ஆகிய நாடுகளுக்குட்பட்டதாகும். இதே போன்று மலேசியா, ஓமான், மாலைதீவு, கட்டார், ரியாத், தென்கொரியா மற்றும் சிங்கப்பூரும் இவற்றுக்கு உட்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக தொழிலாளர் சேமநல நிதியத்தை மேலும் வலுவூட்டுவதற்காக வெளிநாட்டு தொடர்புகள் திறன் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயலணியின் தலைவர் கமல் ரத்வத்தே அவர்கள் மற்றும் செயலணியின் பணிப்பாளர் சபை மேலும் 8 மில்லியன்) ரூபா மானியத்தை சம்பந்தப்பட்ட 16 வெளிநாட்டுத் தூதுக்குழுகளுக்கும் தொழிலாளர் சேமலாப பிரிவு உடனடியாக வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று நிலமைக்கு மத்தியில் புலம்பெயர் பணியாளர்களுக்கு தற்பொழுது உள்ள சட்ட நிலமையை கருத்தில் கொள்ளாது நிவாரணத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 24×7 செயல்படும் 1989 என்ற உடனடி தொலைபேசி ஊடாக வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன். இதன்மூலம் பெறப்படும் தகவல்களுக்கு அமைவாக பணியாளர்கள் உள்ள நாடுகளின் தூதரகங்களில் தொழிலாளர் சேமநலப்பிரிவிற்கு சமர்ப்பித்து தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு புலம்பெயர் பணியாளர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக தொழிலாளர் பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுக்குழு அதிகாரிகள், பல்வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோருடன் இணைந்து தற்பொழுது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொற்று நோய் அச்சுறுத்திலினால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் பணியாளர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
.கொவிட் 19 வைரசிலிருந்து புலம்பெயர் பணியாளர்களை பாதுகாப்பதற்காக முகக்கவசம், கைகளைக் கழுவுவதற்கான திரவப் பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்கு 16 வெளிநாட்டு தூதுக்குழுக்களும் தொழிலாளர் பிரிவின் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இலங்கையின் விசேட வைத்திய நிபணர் ஒருவருடன் நடத்தப்பட்ட நேர்காணல் தொடர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகப்புத்தகத்தில் (Facebook) ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் புலம்பெயர் பணியாளர்கள் தம்மை வைரசிலிருந்து பாதுகாப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டுத் தூதுக்குழு அமைந்துள்ள தொழிலாளர் பிரிவில் உடனடி தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் புலம்பெயர் பணியாளர்களுக்கு வைரசு தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுகின்றன.

அனைத்து தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் தொடர்புபடும் 24 மணித்தியாலமும் செயல்படும் குழுமம் (whatsApp Group ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் தொடர்பாடல்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதினால் பணியாளர்களின் பிரச்சினைகள் பலவற்றிக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டுள்ளன.
சீசெல்லில் சிக்கியிருக்கும் புலம்பெயர் பணியாளர்களுக்காக தொடர்ச்சியாக தேவையான நிதியை  தூதரக அலவலகத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பான் கப்பலின் மூலம் இந்தியாவில் சென்னை ஊடாக வந்த பணியாளர்களுக்கு விமானப் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக ஐயாயிரம் முகக்கவசங்கள் கொரியாவின் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துகள்