கொரோனா என்ற ஒரு வைரஸ் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது கண்ணுக்கு தென்படாத ஒரு வைரஸ் உலகில இறைவனின் சிறந்த படைப்பான மனித குலத்தின் எண்ணிலடங்கா உயிர்களை காவு கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் என்றால் என்ன...?

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள  கொரோனா வைரஸ் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஊஹானிலுள்ள சைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீனா நாட்டு சகாதார அதிகாரிகள் கூறுகின்றார்கள். விலங்குகளிலிருந்தே இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்பதை அந்நாட்டு தேசிய சுகாதார மத்திய சபையும் உறுதி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவது எப்படி...?

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இவ்வைரஸ் பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

என்ன பாதிப்பை ஏற்படுத்தும்....?

கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படுகின்றது அதன் பிறகு அது வரட்டு இருமலை உண்டாக்கி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கின்றது. இந்த வைரசால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து உடல் உறுப்பு  நிமோனியா போன்றவைகள் செயழிலந்து உயிர் போகும் அபாயம் உருவாகுவதாக உலகளாவிய வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மருந்து இருக்கிறதா...?

உலகளாவிய ரீதியில் எந்தவொரு நாடும் கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தீர்வு. இதனால்தான் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவரை  தனிமைப்படுத்தி
அனைத்துலக நாட்டிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இதன் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுப்பதே தற்போதய முதன்மை நோக்கமாக இருக்கின்றது.

எப்படி பாதுகாத்துக் கொள்வது...?

இருமல், தும்மல், சளி, வறண்ட தொண்டை, காய்ச்சல் போன்றவை இரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் கண்டிப்பாக வைத்தியர் ஒருவரை நாடி உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டு அதற்கான நிவாரணியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மூக்கு - வாயை மறைக்கும் (மாஸ்க்) முகக்கவசம்   வைரஸ் கிருமிகள் தொற்றாமல் கையுரையும் அணிந்து செல்வது இவ் வைரஸிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வதற்கான சிறந்த வழியாகும்.

குறிப்பாக சனக் கூட்டம் நிறைந்த  இடங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்வதோடு
அடிக்கடி  கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்வதோடு இருமல், தும்மலின் போது மூக்கு,வாயை துணியால் மூடிக்கொள்வதும் பிறரையும் இந் நோயிலிருந்து பாதுகாப்பதற்கான உத்தியாகும்.

சீனாவில் ஊஹான் மாநிலத்திலிருந்து உருவாகிய இந்த வைரஸ் 1200 km தொலைவிலுள்ள சீனாவின் தலை நகரம் பெய்ஜிங்கையோ,அதனை அண்டிய 839 km தொலைவிலுள்ள சீனாவின் பொருளாதார தலை நகரமான சாங்காயிலோ இவ் வைரசானது பாரிய அளவில் தாக்கம் செலுத்த வில்லை.

அதற்கு முற்றிலும் மாறாக சீனாவின் ஊஹான் மாநிலத்திலிருந்து 15000 km
தொலைவிலுள்ள அமெரிக்கா தலைநகர் நியுயோர்க்கையும்,9000 km தொலைவிலுள்ள இத்தாலியையும் 3695 km தொலை தூரத்திலுள்ள இந்தியாவையும் பாரிய அளவில் தாக்கியுள்ளதானது இவ் வைரஸ் சீனாவின் சூழ்ச்சியோ என உலக நாடுகளை யூகிக்க  வைத்துள்ளது.

ஊஹான் மாகாணத்திலிருந்து  உருவெடுத்ததாக  கூறும் இந்த கொரோனா வைரஸை  ஏனைய மாகாணங்களுக்கு பாரிய அளவில் தாக்கம் செலுத்தாமல்  சீனா அரசாங்கத்தால் தடுக்க முடியும் என்றால் ஏன் தொலை தூரத்திலுள்ள பிற நாடுகளுக்கும் இவ்வைரஸ் தொற்று சொல்லாமல் தடுக்க முடியவில்லை...!!! இவ்வைரஸின் தாக்கம் பற்றி சீனா அரசாங்கம் பிற நாடுகளுக்கு சரியான தெளிவூட்டல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க இவ்வைரசின் தாக்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிரங்கமா தெளிவூட்டிய சீனா மருத்துவர் ஒருவரும்,உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவரும் இறந்ததன் மர்மம் என்ன என்ற பல கேள்விகளை இந்திய ஊடகங்கள் தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளன.

உலகில் நாங்கள் தான் வல்லரசு என்று மார்பு தட்டிக் கொள்ளும் சர்வதிகார மேற்கத்தய நாடுகளே இந் நோயை கண்டு பயந்து நடு நடுங்கி கொண்டிருக்கின்றது. உலகில்  எண்ணை வளம் மிக்க செல்வந்த  நாடுகள் இந்த நோய்க்கான மருந்தை கண்டு பிடிக்க கோடான கோடி செலவளிக்க தயாராக இருந்தாலும் அதற்கான மருந்தை கண்டு பிடிப்பதில் பல நாடுகள் தோல்வியையே சந்தித்துள்ளன.

உலகின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவின் பணப்பரிமாற்றுவிதம் டொலரே என்றும் முன்னிலையில் இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் கச்சாய் எண்ணையை மத்திய கிழக்கு நாடுகளில்  அதிக விலை கொடுத்து வாங்கி அதுவே உலக நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்றும் வருகின்றது. அதன் விளைவுதான் உலகின் தங்கத்தின் நிர்ணயத்தை கூட அமெரிக்காதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.

அது முற்றிலும் தலை கீழாக மாறுமோ என அமெரிக்கா தவி தவித்துக் கொண்டுள்ளது.காரணம் உலகின் அடுத்த கட்ட பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக கொரோனாவுக்கான மருந்தே உருவெடுக்கும் வாய்ப்பும் தோன்றியுள்ளது.

எவ்வாறாயினும் இந் நோயை சீனாவே உருவாக்கி அதனை பிற நாடுகளுக்கு தொற்ற வைத்து அதற்கான மருந்தை காலதாமதமானாலும் தாமே உருவாக்கி அதன் மூலம் சீனாவை பொருளாதாரத்தின் உச்ச நிலைக்கு கொண்டு செல்லும்  சீனாவின் தந்திர உபாயமாகவும் இருக்கலாம். மறு புறம் சீனாவின் நட்பு நாடான ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இவ்வைரஸின தாக்கம் மேலாங்காமலிருப்பது மேலும் சீனாவின் மீது சந்நேகத்தை கிளரவைத்துள்ளது.
எவ்வாறாயினும் 21 ம் நூற்றாண்டின் பலம் ஆள் பலமா,ஆயுத பலமா,பண பலமா அறிவு பலமா  என்று தம்மைத் தாமே நாம் சுய பரிசோதனை செய்து கொண்டால் நிச்சயம் அறிவார்ந்த  ஒருவர் அறிவு பலம் என்றே கூறுவார்.

ஏனெனில் அறிவு பலத்தால் மாத்திரமே இவ்வாறான கொடிய நோய்களுக்கு மருந்தை கண்டுபிடிக்க முடியுமே தவிர மாறாக ஆள் பலத்தாலோ,ஆயுத பலத்தாலோ,பொருளாதார பலத்தாலோ எதுவும் சாதிக்க முடியாது என்பதுவே நிதர்சனமான உண்மையாகும்.

வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.