தற்போது உருவாகி இருக்கின்ற அரசியல் நெருக்கடியின் கீழ் உயர் நீதிமன்றம் தனக்கு உத்தரவிட்டால் மட்டுமே பாராளுமன்றத்தைக் மீள கூட்டத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் ஜுன் 02ஆம் திகதிக்கு முன் கூட்டப்படாததை அடுத்து பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறாதொரு நிலையில் சபாநாயகர் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டுவாரா? என்றதொரு கேள்வி அரசியல் அரங்கிலே பரவலாக எழுப்பப்படுகினறது.

இது குறித்து பதிலளித்திருக்கின்ற கரு ஜயசூரிய,
நிர்வாகத்துக்கும் சட்டவாக்கத்துறைக்கும் ஒரு நெருக்கடியை தான் ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் உயர்  நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டும் பாராளுமன்றத்தை நான் மீண்டும் கூட்டுவதற்குத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எதிர்க்கட்சியினர் பலர் பாராளுமன்றத்தை ஜுன் 02ஆம் திகதியின் பின் கூட்ட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.