மேல் மாகாணத்தில் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகி உள்ள மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கை சேர்ந்த சுமார் 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா வழங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொடர் ஊரடங்கு காரணமாக கொழும்பு , களுத்துறை கம்பஹா உட்பட்ட மேல்மாகாணத்திலும் , வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் , வவுனியா உட்பட்ட பகுதிகளில் தொழில் நிமிர்த்தமும் இதர காரணங்களுக்காகவும் சென்று நிர்க்கதி நிலைக்கு ஆளாகி உள்ள பல நூற்றுக்கணக்கான மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களை சேர்ந்தவர்களது நலனோம்பு விடயங்களிலும் அவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மெளலானா அவர்களது  முன்னெடுப்புக்கள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அரசின் இறுக்கமான நடைமுறைகளாலும், ஏனைய மக்களது நலன்களையும் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு தற்காலிகமாக குறித்த முயற்சிகள் பிற்போடப்பட்டுள்ளது,

இந்நிலையில் குறித்த பகுதிகளில் அடைபட்டுள்ள மக்கள் ஊரடங்கு அமுலில் உள்ளதனால் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர் , இவ்வாறானவர்களது விபரங்களை திரட்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் , பிராந்திய ஆளுநர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களை தொடர்பு கொண்டு குறித்த நபர்களது விபரங்களை வழங்கி அடிப்படை உணவு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து வழங்கியதுடன் , கொழும்பில் உள்ளவர்களில் பலருக்கு நேரடியாகவும் உணவு உட்பட்ட அடிப்படை தேவைகளை ஓரளவு இயலுமான வரை வழங்கி வந்தார்கள்.

அந்த வகையில் நிர்க்கதி நிலையில் மேல் மாகாணத்தின் கொழும்பு , களுத்துறை, கம்பஹா  மாவட்டங்களில்  அல்லல்படும்  கிழக்கை சேர்ந்த சுமார் 200 பேருக்கு   அரிசி , கோதுமை, பால்மா , சீனி பருப்பு அடங்கலாக அடிப்படை உணவுத்தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான உலர் உணவு பொதிகளை அவர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.